| | ஞாலத் துயர்கெட வருவா னுயர்தவ | | | நன்றாற் றியவிது தகுமென்னாச் | | | சாலத் தனதுள நினைகின் றுழியுயிர் | | | தணிவுற் றுழியல தடிசேராச் | | | சீலத் திளையவ னருளா லொருமொழி | | | திகழ்வுற் றதுவிரி வெளியூடே. |
(இ - ள்.) அழகு பொருந்திய திண்ணியமலையானது வாய்பிளந்தாற் போன்ற ஒளிர்கின்ற நிறம் பொருந்திய பெரிய மணிகள் ஒளியினைப் பரவச்செய்கின்ற குகையை யடைந்து பூமியின்கண்ணுள்ள ஆன்மாக்களின் றுன்பங்கெட வருபவனாகிய நந்தியெம்பெருமான் தவத்தினைப் பெரிதுஞ் செய்ய இது தகுதியாகுமென்று மிக மிகத் தன்னெஞ்சமானது நினைகின்ற காலத்து ஆன்மபோதங் கெட்ட விடத்தல்லது (அவ்வான்மாக்களை) திருவடியின்கட் கலப்புறு வண்ணஞ் செய்யா ஒழுக்கத்தினையுடைய முருகப்பெருமானது திருவருளினாலே ஆகாயத்தினிடத்து ஒரு திருவார்த்தை வெளிப்பட்டது, (வி - ம்.) ஞெமிர்தல் - பரத்தல்; இதனை "ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள்" வென்னும் (தொல் - சொல்)சூத்திரத்தானறிக. உயிர்தணிவுறுதல் - ஆன்மபோதங் கெடல். வெளி - ஆகாயம். (43) | | வற்றா மதம்விளை பஞ்சேந் தியவரு மலைவென் றவர்பலர் தவமூக்கிப் | | | பெற்றா ருயரிய சித்தித் திறமிவ ணதனாற் பிழைதபு குகைநாமம் | | | கற்றா சொருவினர் சித்திக் குகையென மொழிவார் கழிதவ மிதினீயும் | | | உற்றா தரியினி நந்திக் குகையென வுரைதிக் கெழுமெனு மொழிகேளா. |
(இ - ள்.) நீங்காத மதத்தை யுண்டாக்குகின்ற பஞ்சேந்திரியங்களாகிய (நாளுக்கு நாள்) வளருகின்ற யானைகளை வென்றவர்கள் பலர்தவத்தை மேற்கொண்டு உயரிய சித்தியின் வகைகளை இக்குகையின் கட்பெற்றார்கள். ஆதலால் மலக்குற்றத்தினைப் போக்குகின்ற குகையின்றிருநாமம் பதிநூலை யறிந்து மலக்குற்றம் நீங்கிய பெரியோர்கள் சித்திக்குகையென்று இதனைச் சொல்வார்கள். இக்குகையின்கண் மிக்க தவத்தினை நீயுஞ்செய்து ஆதரிப்பாய். இனி நந்திக்குகை யென்னுஞ் சொல் திக்குக்களிலெல்லாம் உண்டாகும் என்னும் திருமொழியைக் கேட்டு. (வி - ம்.) பஞ்சேந்திய வருமலை - பஞ்சேந்திரியங்களாகிய யானை. கழி - மிக்க. (44) | | விடையம் பொறிவழி மறவிக் கனவினும் வெஃகா தவைவிய வித்தட்கும் | | | நடைவிஞ் சியவுள மகிழ்மிக் கெழுதர நந்திக் குரிசிற விர்ந்தியோகின் | | | இடையும் வளிநடு வழியூ டினிதெழ வெழுதோ வியமென வசைவற்றுள் | | | அடையுஞ் சுடர்விழி யிருமுந் நிலைகளி னடைவிற் படர்வன படர்வுற்றான். |
(இ - ள்.) சுவை யொளியூறோசை நாற்றமென்னும் பொருள்களை மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் பொறிகளின் வழியே சென்று |