பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்335

மறந்தாயினும் விரும்பாது அவ்வைம்பொறிகளை யேவல்கொண்டு தடைப்படுத்தும் நெறியிலே மிகுந்த வுள்ளத்தின்கண் மகிழ்ச்சி மிகவெழாநிற்க நந்தியெங்குரவனாகிய தலைவன் யோகத்தின்கண்ணே பொருந்தி, இடைவிக்கும் (இடைகலை பிங்கலை வழியே செல்லும்) வாயுவானது சுழுமுனை நாடியின் வழியே இனிதாக இயங்காநிற்க எழுதிய சித்திரம்போன்று சிறிது மசைதலில்லாமல் (இங்ஙனம் செய்யும் யோகினால்) உள்ளத்தின்கண்ணுளவாகிய ஞானக்கண்ணானவை ஆறாதாரங்களின் முறைப்படி பொருந்துவனவாகச் சென்றான்.

(வி - ம்.) மறவி - மறந்து. வியவி - ஏவல்கொண்டு, தட்கு நடை விஞ்சியவுளம் - தடைசெய்யும் வழியிலே அதிகரித்தவுள்ளம். நடை - வழி, தவிர்தல் - தங்குதல். இடையும்வளி - இடைவிக்குங் காற்று. இடைவித்தல் - அடக்கல். நடுவழியூடினிதெழ - (இடைகலை பிங்கலையிலியங்குங் காற்று) சுழுமுனையிலினிதாக வியங்க, உள்ளடையுஞ் சுடர் விழி - யோகப் பயிற்சியானுள்ளே யுளவாகும் ஞானநோக்கு; இருமுந்நிலை - ஆறாதாரங்கள். அடைவிற்படர்வன - முறையிற் படர்வனவாக. படர்வுற்றான் - சென்றான். இனி அடைவிற் படர்வன படர்வுற்றானென்பதற்கு - ஆறாதாரங்களினிடத்து முறையாகப் பொருந்துவனவாகிய ஆறாதாரப் பெருள்களை (ஞானக்கண்ணாற்)

(45)

 ஆறா தாரமு முறையிற் கழிதலு மவிழா யிரவித ழரவிந்தத்
 தேறா ரூடம தெனவைத் தருளிய விறைபார்ப் பதியிரு புடைவைக
 வீறார் பலபரி சனமுங் கஞலுற வினைவென் றவர்பலர் தொழுதேத்தக்
 கூறா வருமறை யோதப் பயில்வகை குமரன் றிருவுரு நினைகின்றான்.

(இ - ள்.) மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம் விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறாதாரங்களும் முறையாகக் கண்டு நீங்கப்பின்னர் விரிகின்ற ஆயிரமிதழ்களோடு கூடிய தாமரைமலரின் கண் இடபத்தை யேறும் வாகனமாகக்கொண்ட இறைவனும் மலையரையன் மகளாகிய உமாதேவியாரும் இரண்டு பக்கங்களிலுந் தங்கப் பெருமை பொருந்திய பல பரிசனங்கள் நெருங்க இருவினையும் வென்றவராகிய தவத்தினையுடையார் பலர் தொழுது துதிக்க நான்கு பகுதியவாகி வருகின்ற வேதங்களை யோதத் தங்குந்தன்மையினையுடைய பிள்ளையார் திருவுருவினைத் தியானிக்கின்றான்.

(வி - ம்.) தாமரை மலரின்கண் பிள்ளையார் திருவுரு நடுவட்டங்க, வைக, கஞலுற, ஏத்த, ஓதப்பொருந்துவகை சிந்தித்தானெனக் கூட்டுக. ஏறு - இடபம். ஆருடம் - ஏறுதல். வீறு - பெருமை. கஞலுற - நெருங்க. பயில்வகை - தங்கும்வகை. அம்மையப்பருக் கிடையிற் பிள்ளையாரெழுந்தருளியிருத்தல் சோமாஸ்கந்தராயிருத்த லென்பர்.

(46)

 வேதத் துயரிய வாறக் கரமனு விரிநா வகமலர் பயில்கிற்ப
 ஏதத் தனிமல வலிசிந் தியவுள மெழிலா ரிறைவன தடிமூழ்க
 நாதத் தலைவளர் போதத் திருவிரு நாளும் வழிபடு நலனோடும்
 போதுற் றனனவன் வினையின் றிரிவொடு போதுற் றனசது ருகநான்கு.