| (இ - ள்.) வேதங்களாலுயர்த்துக் கூறப்பட்ட ஆறெழுத்தாகிய மந்திரம் விரிந்த நாவாகிய மலரினுள்ளிடத்திற் பயில, குற்றத்தோடு கூடிய ஒப்பற்ற ஆணவமலத்தின் சத்தியைக் கெடுத்த மனமானது அழகு பொருந்திய பிள்ளையாரினது அடியின்கண்ணே மூழ்க பிரணவத்தினிடத்து வளர்கின்ற ஞானமாகிய திருவுருவினை ஒவ்வொருநாளும் வழிபாடு செய்யும் நலனோடு போந்தனன். அவன் வினைமாறுபாட்டினோடு நான்கு சதுர்யுகங்கள் கழிந்தன. (வி - ம்.) ஆறக்கரம் - சடாட்சரம். ஏதம் - குற்றம். நாதம் - ஈண்டு பிரணவம். போதம் - ஞானம். வினையின்றிரவு - வினைநீக்கம். (47) | | விண்ணோ ரவுணர்கண் முதலா வனைவரும் | | | விற்றுன் றியவிவன் விழைவென்னென் | | | றெண்ணா வலமர விளைமா தவனிடை | | | யெதிரின் றெழுதரு மருளோடும் | | | தண்ணார் மதிமுடி யிறைவர்க் கருளிய | | | தலைவன் மயின்மிசை யெதிர்நின்றான் | | | மண்ணா வொளிவிடு மணிபோல் பவனடி | | | மலர்வீழ்ந் தருமறை மொழிகிற்பான். |
(இ - ள்.) தேவர்களும் அவுணர்கள் முதலாகிய யாவரும் தவவொளி மிகுந்த இவன் விருப்ப மென்னவென்றெண்ணிச் சுழலப்பெரிய தவத்தினைச் செய்கின்ற நந்தியெம்பெருமான் முன்னர் ஒப்பிலா தெழுகின்ற அருளினோடு குளிர்ச்சி பொருந்திய மதியினைக் குறுங்கண்ணியாக முடித்தலைச் செய்த சிவபெருமானுக்குப் பிரணவத்தின் பொருளைச் செவியறிவுறுத்தருளிய பிள்ளையார் மயின்மீதெழுந்தருளி நின்றனன். கழுவாது ஒளியினை வெளியிடுகின்ற மணிபோல்பவனாகிய முருகக்கடவுளின் அடியாகிய மலரின்மீது வீழ்ந்து அரிய வேதமாகிய தோத்திரங்களைச் சொல்வானாயினன். (வி - ம்.) வில் - ஈண்டுத் தவவொளி. மண்ணா - கழுவாது "மண்ணியறிப மணிநலம்" என்றார் நான்மணிக்கடிகையினும். (48) வேறு | | தடவிய வுளத்துச் சேக்காத் தற்பரா னந்த போற்றி | | | இடவிய செய்ய நெஞ்சத் திறைகொளு மிறைவ போற்றி | | | மடவிய மலஞ்சே தித்து வரமருள் வள்ளல் போற்றி | | | நடவிய மஞ்ஞை யூர்தி நாயக போற்றி போற்றி. |
(இ - ள்.) கோட்டம் பொருந்திய மனத்தின்கண்ணே தங்காத அந்த மேலான இன்புருவானவனே வணக்கம். இடமகன்ற செவ்விய நெஞ்சத்தின்கண்ணே யெழுந்தருளியிருக்கும் தலைவனே வணக்கம். அறியாமை கலந்த ஆணவமலத்தினைக் கெடுத்து அடியார்கள் விரும்பிய வரங்களை யருள்கின்ற வள்ளற்றன்மை யுடையவனே வணக்கம். நடத்துகின்ற மயில்வாகனத்தையுடைய நாயகனே வணக்கம். |