| (வி - ம்.) தடம் - கோட்டம்; "தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. இடவிய - இடமகன்ற. மடவிய - மடங்கலந்த. நடவிய - நடத்துகின்ற. (49) | | வேதனா யுலகந் தோற்றி வேதனெண் ணரியாய் போற்றி | | | மாதவ னாகிக் காத்து மாதவற் கெய்தாய் போற்றி | | | போதனாய்த் துடைத்துப் பூத்து வேறுமாய்ப் பொலிந்தாய் போற்றி | | | ஆதியீ றிடையு மாகி யவையொன்று மணுகாய் போற்றி. |
(இ - ள்.) பிரமனாகி யுலகத்தினைப் படைத்து அப்பிரமனும் நினைத்தற்கருமையானவனே வணக்கம். திருமாலாகி உலகினைக் காத்து அம்மாலினுக்கும் அறியமுடியாதவனே வணக்கம். ஞானவடிவினனாகி யழித்தலைச் செய்து (ஆண்டொடுங்கிய பிரபஞ்சத்தை) தோற்றுவித்து அவ்வுலகின் வேறாகி விளங்கியவனே வணக்கம். முதலுமீறு மிடையுமாகி அவைமூன்றுந் தன்பாலணுகாதவனே வணக்கம். (வி - ம்.) போதனாய் - ஞானவடிவினனாகி. துடைத்தல் - அழித்தல். பூத்தல் - (சகசமல நீங்காமையின் ஒடுங்கியவாறே) தோற்றுவித்தல். வேறுமாய் - அங்ஙனந்தோன்றிய பிரபஞ்சத்தின் வேறாய். ஆதியீறிடை - தோற்றம் நிலை ஒடுக்கம். (50) | | ஐம்படை சுமந்த வாளி யண்ணற்கு மண்ணல் போற்றி | | | நம்பன்மெய் பாதி செய்த நாமவே னம்பி போற்றி | | | வெம்படை வீரர் தாழும் வீரர்க்கும் வீர போற்றி | | | உம்பரி னும்பர் போற்று மும்பர்க்கு மும்ப போற்றி. |
(இ - ள்.) ஐம்படைகளைத் தாங்கிய (இறைவன்) அம்பாகிய தலைவனாந் திருமாலுக்கும் தலைவனே வணக்கம். சிவபெருமான் உருவத்தைப் பாகஞ்செய்தலாலுளவாகிய அச்சத்தைத் தரும்படியான வேற்படையை யுடைய ஆடவரிற் சிறந்தவனே வணக்கம். கொடிய படைகளையுடைய வீரர்கள் யாவரும் வணங்கத்தக்க வீரருள்வைத்து வீரனே வணக்கம். தேவருலகின்கண்ணுள்ள தேவர்கள் வணங்குந் தலைமைத் தேவர்களுக்குந் தேவனே வணக்கம். (வி - ம்.) ஐம்படை - சங்கு, ஆழி, தண்டம், வாள், வில். ஐம்படைசுமந்த வாளியண்ணல் - திருமால். இறைவனுக்கு விண்டு அம்பாதலை "போக மீன்ற புண்ணிய னெய்த கணையேபோல் - மாக விசும்பின் மாமதி யன்னான் வளர்கின்றான்" என்னுஞ் சிந்தாமணியடிகளா னுணர்க. வாளியண்ணல் - பண்புத்தொகை. இறைவன் றன்னொடு கலந்துநின்ற சத்தியினை வேற்படையாகத் தந்தானாதலின் "நம்பன்மெய் பாதிசெய்த நாமவே னம்பி" என்றார். வீரர்க்கும் வீர என்பதனை "மள்ளர் மள்ள மறவர் மறவ" என்னும் பாணாற்றுப்படை யடிகளைப்போலப் பொருள் கொள்க. (51) | | வெளியிடை யொன்றாய் நின்ற வெளிமுதல் வெளியே போற்றி | | | வளியிடை யிரண்டாய் நின்ற வளிமுதல் வளியே போற்றி |
|