| வேறு | | சிவதத்துவ வமிர்தப்பெயர் சிவணுங்குளிர் தீர்த்தம் | | | இவணுந்தியின் வருவித்ததி லெனைமுக்கியெ டுத்துப் | | | பவமுற்றிய பாசம்பசு பதியின்றிற மருளிச் | | | சிவதத்துவ வமிர்தக்கட றிகழ்வித்திடு கென்றான். |
(இ - ள்.) சிவதத்துவ வமிர்தமென்னும் திருப்பெயரினைப்பொருந்துங் குளிர்ந்த தீர்த்தத்தினை இவ்விடத்து நதியைப்போல வரும் வண்ணஞ் செய்து அதனிடத்தடியேனை மூழ்குவித்து எடுத்துப் பிறவி மல்குவதற்கேதுவாய பாசம் பசு பதியாகிய முப்பொருள்களின் றன்மையைச் செவியறிவுறுத்துச் சிவதத்துவ வமிர்தமாகிய கடலின்கண் மூழ்கி விளங்கும்படி செய்வாயாக வென்றனன். (வி - ம்.) பவமுற்றியபாசம் - பிறவி மல்குதற்கேதுவாகிய பாசம். திறம் - தன்மை. சிவதத்துவ வமிர்தக்கடல் - வீடு. (60) | | தெருளொன்றிய வரநல்கிய சீபூரண கிரியான் | | | நிருதித்திசை முகனாயின னிகழ்தத்துவ வமிர்தம் | | | வருகென்றுகை மலரின்றலை வளைவித்தலு முக்கால் | | | வெருவிச்சன முளையும்படி விரைவுற்றது வருமால். |
(இ - ள்.) தெளிவு பொருந்திய (நந்தியெம்பெருமான் விழைந்த) வரத்தினை நல்கும்பொருட்டுத் தணிகைமலைக் குரியவனாகிய முருகக்கடவுள் மேற்கு முகமாக நின்றவனாகி விளங்குகின்ற தத்துவமிர்தமென்னும் தீர்த்தம் வரக்கடவதென்று கையாகிய மலரால் மூன்று முறை சுற்றலும் அச்சமுற்று மக்கள் வருந்தும் வண்ணம் அத்தீர்த்தம் விரைவாகி வந்தது, (வி - ம்.) நிருதித்திசை - மேற்குத்திசை. முக்கால் வளைவித்தலு மெனக் கூட்டுக. வரும் + ஆல் : அசை. வரும் : கால வழுவமைதி. (61) | | மங்கைக்கிட மிடமாகிய வரதன்முடி மடுவில் | | | கங்கைப்புனல் பொங்கிப்புடை கவிழ்கின்றது நிகரத் | | | துங்கக்கிரி முடியிற்றவிர் தோயங்கடி திழியா | | | அங்கட்புவி கிழியப்பட ராறாயெழு தருமே. |
(இ - ள்.) உமையம்மையாருக்கு எழுந்தருளியிருக்குமிடம் இடப்பாகமாகப் பொருந்தப்பெற்ற மேலானவனாகிய சிவபெருமான் திருமுடியாகிய தடாகத்தின் கண்ணுள்ள கங்கையாகிய நீர்பொங்குதலுற்றுச் சிந்துகின்றதையொப்ப உயர்வாகிய வில்வமா சயிலத்தின்கட்டங்கிய தீர்த்தம் விரைவாக இழிந்து ஆண்டுள்ள மண்பிளக்க நதியாக எழுந்து வந்தது. (வி - ம்.) இடம் இடமாகிய வரதன் - இடம் இடப்பாகமாகப் பொருந்தப்பெற்ற வரதனென்க. துங்கக்கிரி - வில்வமாசயிலம். தோயம் - நீர். எழுதரும் : காலவழுவமைதி. (62) |