| | சந்தக்குற டகிலின்றுணி தரளக்குவை பெயரா | | | உந்திக்கன வயிரங்களொ துக்கிப்புடை யெதிரும் | | | கொந்தற்றலர் தருவுங்குவ டுகளுந்தலை மறியப் | | | பந்தப்படு சிறையும்பல பறையக்கடு கியதே. |
(இ - ள்.) சந்தனக்கட்டையும், அகில்மரங்களின்றுண்டங்களையும் முத்துக்குவாலையும் பெயர்த்து, திண்ணிய வயிரக்கற்களைச் செலுத்தி யொதுக்கிப் பக்கங்களிலெதிர்ந்த கொத்துக்கள் பொருந்தி அலர்ந்த மரங்களும் மலைச்சிகரங்களும் தலைமடங்கக் கட்டப்பட்ட கல்லணை பலவுங்கெட விரைந்து சென்றது. (வி - ம்.) குறடு - கட்டை. துணி - துண்டம். பறைய - கெட. சிறை - கல்லணை. கடுகியது - விரைந்தது. (63) | | ஒளிர்பொன்னணி மலைமாதுள முளையப்புவி வீழா | | | நெளியப்புடை தவழாவுட னிமிராநடை கொள்ளா | | | வளிபிற்பட வோடாமலி மழலைக்குரல் பயிலும் | | | அளிமுற்றிய சிவதத்துவ வமிர்தப்புனன் மகவே. |
(இ - ள்.) கருணை முதிர்ந்த சிவதத்துவ வமிர்தம் என்ற பெயர் பெற்ற ஆற்றுநீர் ஆகிய மகவானது ஒளிர்கின்ற பொற்கட்டிகள் அழகைத் தருகின்ற மலையாகிய பெண்ணின் உள்ளமானது வருந்தப் பூமியின் கண் வீழ்ந்து பூமிநெளியப் பக்கங்களிற் றவழ்தலுற்று உடனிமிர்ந்து நடத்தலையுற்று (வேகத்தாற்) காற்றும் பிற்பட ஓடி மழலைச்சொற்போல ஒலிபெருகச் சென்றது. (வி - ம்.) மலைமாது - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. நதியைக் குழவியாக வுருவகஞ்செய்தலின் மலையை மாதாகக்கொள்க. இமவான் மகளன்று. மாது - தாய். மகப்பயிலுமென முடிக்க. வீழா, தவழா, நிமிரா, நடைகொள்ளா, ஓடா என்ற வினையெச்சங்கள் பயிலும் என்ற முற்றைக் கொண்டன. (64) | | மலதத்துவ விருள்கண்டெதிர் மருவத்தவ வெருவி | | | அலறிப்புடை யிரிவுற்றென வருவிக்கட கரிகள் | | | பலவன்றிக ளுளியங்கலை பதறிக்குளி றொலியின் | | | விலகும்படி விரிவுற்றது சிவதத்துவ வமிர்தம். |
(இ - ள்.) சிவதத்துவ வமிர்தமென்னும் நதியானது மாயா காரியங்களாகிய முப்பத்தொரு தத்தவங்களும் மாயேயமுமாகிய தத்துவமாகிய இருள் எதிரே பொருந்த மிக அச்சமுற்று அலறுதல் செய்து பக்கத்தே ஓடினாற்போல மதத்தை யருவிபோலக் கொட்டுகின்ற யானைகளும் பல பன்றிகளும் கரடிகளும் மான்களும் நடுக்கமுற்று ஒலிக்கின்ற முழக்கத்தால் விலகிச்செல்லும்படி ஓடியது. (வி - ம்.) 31 தத்துவமாவன - ஆன்மதத்துவம் 24 வித்யாதத்வம் 7 ஆக முப்பத்தொன்று, மாயேயம் - மாயாகாரியங்கள். (65) |