| | நஞ்சேந்திரு ளரவந்தபுத் தரவங்கொடு நலியும் | | | பஞ்சேந்திய விபமாதபுத் திபமாபல தழுவி | | | மஞ்சேந்திய காயந்தொக வருகாயம கற்றி | | | அஞ்சேலென வுலவுற்றது சிவதத்துவ வமிர்தம். |
(இ - ள்.) சிவதத்துவ வமிர்தமானது நஞ்சினைத் தாங்கிய ஆணவமலமாகிய பாம்பினைக் கெடுத்து ஒலிகொண்டு ஆன்மாக்களை வருத்துகின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளைக் கெடுத்து பல யானைகளைத் தழுவி அழகு பொருந்திய உடம்புகள் தன்மாட்டு வந்து மூழ்குதலான் இனி வருகின்றவுடம்பினை நீக்கி அஞ்சற்கவென வந்துலாவியது. (வி - ம்.) இருளரவம் - ஆணவமாகிய பாம்பு. அரவம் - ஒலி, இதனை "அரவநூபுரம் பாம்போசை" எனும் நிகண்டானறிக. இபமா - யானை. தபுத்து - கெடுத்து. மஞ்சு - அழகு, இதனை "மஞ்சு பூண்வலிவனப்பு" என்னும் நிகண்டானறிக, வருகாயமகற்றல் - மூழ்கினவர்க்கு இனியுளவாகுங் காயத்தை நீக்கல். (66) | | இரண்டற்றொளிர் சிவதத்துவ மினிதுய்த்தருள் புகழ்போல் | | | வரண்டித்திரை தருநித்தில மணியும்பன்ம ருப்புக் | | | குரண்டத்தொகை யன்னத்திரள் குருகின்கணம் வளைகள் | | | திரண்டொத்தது நுரைபொங்கிய சிவதத்துவ வமிர்தம். |
(இ - ள்.) நுரைகள் பெருகிவரும் சிவதத்துவ வமிர்தமானது அத்துவிதமாகக் கலப்புற்று விளங்குகின்ற சிவதத்துவத்தை இனிதாகத் தொண்டர்கட்கு அளித்தலாலுண்டாகிய புகழ் திரண்டிருப்பதுபோல, அலைகள் வாரித்தருகின்ற முத்துக்களாகிய மணியும், பலயானைக்கொம்புகளும், கொக்குகளின் கூட்டங்களும், அன்னங்களின் கூட்டங்களும், வெள்ளிய பறவைகளின் கூட்டங்களும், சங்குக் கூட்டங்களும் திரண்டு பொருந்தியது. (வி - ம்.) திரண்டொத்தது - இடத்திற்றொழில் இடத்து நிகழ் பொருளின்மேலேற்றிக் கூறப்பெற்ற உபசாரம். உய்த்தருள் புகழ் போல் - உய்த்தலாலுண்டாகிய புகழ்திரண்டிருப்பதுபோல். திரண்டொத்தது - திரண்டு பொருந்தியது, (67) | | கலவும்பொறி விடயம்படை காமாதிக ளாக்கி | | | நிலவிஞ்சியி னரையற்றப நிகழுந்தனி யொளிபோல் | | | அலர்குங்கும மருதந்தளி ரவிரிங்குலி கங்கொண் | | | டுலவுற்றது சிவதத்துவ வமிர்தப்புன லுந்தி. |
(இ - ள்.) சிவதத்துவ வமிர்தமென்னும் நீரோடுகூடிய நதியானது. பொருந்துகின்ற இயந்திரங்கள் ஐந்து விடயங்களாகவும், காமக் குரோத முதலிய குணங்கள் படைகளாகவும், அமைத்துக்கொண்டு பொருந்துகின்ற உடலாகிய மதிலின்கணுள்ள உயிராகிய அரையனைக் கெடுத்தலானுளதாகிய ஒப்பற்ற பிரதாபத்தினைப்போல விரிந்த குங்குமமும், மருதமரத்தின் றளிரும், விளங்குகின்ற சாதிலிங்கமுமாகிய இவைகளை வாரிச் செந்நிறங்கொடு செல்லுதலுற்றது. |