| (வி - ம்.) இனியொரு சாரார் பொருந்துகின்ற ஐம்பொறிகளையும் விடயங்களையும், காமாதிகளையும் படையாகவமைத்து உடலை மதிலாகவும், உடலின்கண்ணுள்ள உயிரை அரசனாகவுங் கொள்வர். பிரதாபத்திற்கு நிறஞ் செம்மையாகலின் "அலர்குங்கும மருதந்தளி ரவிரிங்குலிகங் கொண்டுலவுற்றது" என்றார். (68) வேறு | | சிலம்படி சிலம்பச் சூழ்ந்து தீங்குழற் கானந் தோற்றி | | | அலந்தவிர் பண்ணை முற்றி யாழிகைக் கொள்ளு நீத்தக் | | | குலம்புரி நங்கை செவ்வேள் குன்றினை வலமாய்ச் சூழ்ந்து | | | நலம்புரிந் தருள்வீ ராட்ட காசத்தை நண்ணிற் றாலோ. |
(இ - ள்.) மலையின் (சிலம்பினையுடைய) அடி ஒலிக்கச்சுற்றி இனிய புல்லாங்குழலினிசையையுடைய (இனிய கூந்தலாக) முல்லை நிலத்தைப் பொருந்தி, கலப்பைப்படைகள் பொருந்திய மருதநிலத்தை (துன்ப நீங்கிய விளையாட்டிடத்தை) யடைந்து, கடலாகிய கணவனைக் கைப்பிடித்து (கணையாழியைக் கைக்கொள்ளும்) வெள்ளமாகிய மேன்மையைச் செய்கின்ற பெண் கண்டார்க்கு விருப்பினைத் தருகின்ற முருகக்கடவுள் தணிகைமலையினை வலமாகச் சுற்றி (ஆன்மாக்கட்கு) நன்மையைச் செய்கின்ற வீராட்டகாசமென்னுஞ் சிறந்த திருப்பதியை யடைந்தது. (வி - ம்.) சிலம்பல் - ஒலித்தல். குழல் - புல்லாங்குழல், கூந்தல். அலம் - கலப்பைப்படை, துன்பம். தவிர்தல் - தங்குதல், நீங்குதல். பண்ணை - மருதநிலம், விளையாட்டிடம். ஆழி - கடல், கணையாழி இது சிலேடையுருவகம். நலம் - ஈண்டு வீட்டின்பம். குலம் - மேன்மை. (69) | | அங்கண்வீற் றருளு முக்க ணமலனைக் குமர வேளைச் | | | செங்கழற் போது போற்றிச் சிவகங்கை மருங்கு தாழ்ந்து | | | வங்கமொ/ன் றொன்றின் முட்டி மறிதரச் சேர்ப்ப ரார்ப்பப் | | | பொங்குவெண் டரங்கத் தெண்ணீர்ப் பொருகடல் கிழித்த தன்றே. |
(இ - ள்.) அவ்விடத்து வேறொருவர்க்கில்லாத அழகுடனிருந்து (ஆன்மாக்களுக்கு) அருளினைச் செய்யும் மூன்று கண்களையுடைய மலமற்றவனை, முருகப்பெருமானைச் செந்நிறம் பொருந்திய வீரக்கழலையணிந்த பாதங்களை வணங்கி சிவகங்கையென்னுந் தீர்த்தத்தின் பக்கலில் தாழ்வுற்று மரக்கலங்களொன்றினோடொன்று மோதி மடங்காநிற்க நெய்தனிலமாக்கள் முழங்க மேன்மேலு மதிகரிக்கின்ற வெள்ளிய அலையினையுடைய தெளிந்த நீர் கரையை மோதுகின்ற கடலினைக் கிழித்துச்சென்றது. (வி - ம்.) வீற்றருளும் - வேறொருவர்க்கில்லாத சிறப்புடனிருந்தருளும். வங்கம் - மரக்கலம். சேர்ப்பர் - நெய்தனிலமக்கள். (70) | | சுரும்புகண் டுளித்த தேறற் றுய்த்திசை முரன்று மூசும் | | | கரும்பொடு மசோகஞ் சூதங் கமலமுற் பலமே முல்லை |
|