| கூத்தியரை நோக்கத் தலை ஆகுபெயராய்க் கூந்தலையுணர்த்திற்று. பூத்துஅலை எனப் பிரிக்க. இயறல் - செல்லல். (73) | | கொக்கின மிறுத்த லானுந் தோலொடு குலாவ லானும் | | | அக்கரை வளைத்த லானு மாடுறு மரவத் தானும் | | | முக்கணெம் பெருமான் செவ்வேன் முருகனென் றிருவர் போலும் | | | தொக்கபன் மணியுஞ் சாந்துந் துறைதுறை கஞற்றும் வாரி. |
(இ - ள்.) கூடிய பல அரதனங்களையும், சந்தனக்கட்டைகளையும், நீர்த்துறைகடோறும் நெருக்கஞ் செய்யும் நதியானது, கொக்கின் கூட்டங்க டங்குதலானும், யானைகளோடு விளங்குதலானும், அக்கரைகளை (அலையாகிய கரங்களால்) வளைத்துக் கொள்ளுதலினாலும் அசைகின்ற குங்குமமரத்தானும் சிவபெருமானையு முருகனையு மொக்கும். (வி - ம்.) பகாசுரனென்னுங் கொக்கினழகைக் கெடுத்தலானும் மான்றோல், புலித்தோல், யானைத்தோல் முதலியவற்றோடு பொருந்துதலானும், சங்குமணிக்கோவையை அரையிற் சுற்றிக்கட்டினதாலும் ஆடுகின்ற பாம்பை யணிந்துள்ளமையானும் எனச் சிவபெருமானுக்குப் பொருள் கூறுக. சூரனாகியமாவையும் அதனினத்தையுங் கெடுத்தலானும் பிணிமுக மென்னும் யானையோடு விளங்கினமையானும், உருத்திராக்க மாலையையணிந்த சிவபெருமானை வணங்கச்செய்தலானும், சென்ற போர் தோறும் வெற்றி பொருந்திய முழக்கத்தினையுடைமையானும் என முருகக்கடவுளுக்குப் பொருள் கூறுக. கொக்கின் + அம் - கொக்கின் அழகு. இறுத்தல் - கெடுத்தல். (74) | | தானங்கைக் கோட லானுந் தகுவரை யடக்க லானும் | | | கானங்கொ டருவின் மாதர் களிதழைப் பித்த லானும் | | | வானங்கொ ளிறைமால் வேழ மூவரு மானு மென்ப | | | பேனங்கொண் டார்த்துப் பைத்துப் பெருங்கடன் மடுக்கும் வெள்ளம். |
(இ - ள்.) நுரையைத் தன்னிடத்தே கொண்டு முழக்கஞ்செய்து விரிதலுற்றுப் பெரிய கடலினை நிறைக்கும் வெள்ளமானது, குறிஞ்சி நில முதலிய விடங்களைக் கைக்கொள்ளுதலானும், தகுதியையுடைய மலைகளைத் தன்னுள்ளேயடக்கிக்கொள்ளுதலானும் காட்டின்கட் டங்குதல்கொண்ட மரங்களின் அழகையும் களிப்பைத் தருகின்ற தழைகளைப் பறித்தலானும், தேவருலகையாண்ட இந்திரனையும் உபேந்திரனையும் யானையையு மொத்தது. (வி - ம்.) பேனம் - நுரை. தானம் - இடம். மாதர் - அழகு. கானம் - காடு. தேவருலகைக்கொண்டு (சிறைகளுடன் பொருந்திப் பறக்கும்) தகுதியுடைய மலைகளை அடக்கி இசைப் பாட்டினைக் கொண்ட கற்பகச்சோலையின் கண்ணுள்ள அரம்பை முதலிய பெண்களுக்குக் களிப்பினை மிக்குளவாக்கி என இந்திரனுக்குப் பொருத்துக. |