| தானம் - சுவர்க்கலோகம், வரை - மலை. கானம் - இசைப்பாட்டு. தருவின்மாதர் - அரம்பை முதலிய தேவமாதர்கள். களி தழைப்பித்தல் - மகிழ்ச்சியினை மிக்குளவாக்கல். மாவலியென்பானீந்த தானத்தினைக் கையின்கணேற்று, அரக்கர்களடக்கி இசையைக்கொண்ட புல்லாங்குழலினால் இடைப்பெண்களுக்கு மகிழ்ச்சி தழைக்கச்செய்து நிற்றலான் என விண்டுவுக்குப் பொருத்துக. தானம் மாவலிபால் வாங்கியதானம். தகுவர் அரக்கர் ஐ : சாரியை. இனியொருசாரார் கோவர்த்தனகிரியாகிய குடையின்கண் ணடங்கி நின்றெனப் பொருள்கூறுவர். கானம் - இசை. தரு - ஈண்டுப் புல்லாங்குழல். மதநீரைக் கைக்கொண்டு மூங்கிலாலாகிய குத்துக் கோலுக்கடங்கிக் காட்டின்கண்ணுள்ள காதலிக்கத்தக்க களிப்பினையுடைய இலைகளைப் பிய்த்தெறிந்து செல்லுதலால் என யானைக்குப் பொருத்துக. தானம் - மதநீர். வலை - குத்துக்கோல். பிய்த்தல் - பித்தல், பறித்தெறிதல். இனியொரு சாரார் தகுவரை யென்பதற்குத் தாங்கள் வசித்தற்குத்தகுந்த மலையிடங்களில் அடங்கியிருத்தலெனப் பொருள் கூறுவர். (75) | | கடம்படு தோற்றத் தானுங் கடலகம் புகுத லானும் | | | இடம்படு கோட்டி னானு மிபமுக னேர்த லானும் | | | தடம்படு துளைக்கைச் செம்மல் சண்முகன் பொதியத் தோன்றல் | | | குடம்படு மாலிந் நால்வர் போன்றது குரைநீர் வெள்ளம். |
(இ - ள்.) ஒலிக்கின்ற நீரினையுடைய நதியானது அரியநெறியின் கட் பொருந்துங் காட்சியானும் கடலினுள்ளே சேறலானும் விரிவாகிய கரைகளினும் யானையின் முகங்கள் தன்னுள்ளே பொருந்துதலானும், பெருமை பொருந்திய துவாரத்தினையுடைய கையோடுகூடிய விநாயகக் கடவுளையும் ஆறுமுகத்தினையுடைய முருகப்பெருமானையும், பொதிய மலையின்கண் ணெழுந்தருளியிருக்கின்ற குறுமுனியையும் குடக்கூத்துப் பொருந்திய திருமாலினையுமொத்தது. கடம் - (காட்டின்கணுள்ள) அருநெறி. இடம்படு - விரிவான. கோடு - கரை. இபமுகம் - யானைமுகம். னகரம் - இறுதிப்போலி. தடம் - பெருமை. விநாயகர் : - மதநீரொழுகுகின்ற வடிவினோடு குழவிப்பருவத்திற் கடலின்கட் பொருந்தித் திருவிளையாட்டுச் செய்து இடப்பக்கத்துப் பொருந்திய தந்தத்தினோடு யானைமுகந் தங்கப்பெற்று எனப் பொருள் கொள்க. தோற்றம் - வடிவம். கடலகம் புகுதல் - குழவிப்பருவத்தில் கடலின்கட் சென்று திருவிளையாடல் செய்தல், காஞ்சிப்புராணத்திற் காண்க. கோடு - ஒற்றைக்கொம்பு. இபமுகம் - யானைமுகம். நேர்தல் - பொருந்துதல். |