பக்கம் எண் :

348தணிகைப் புராணம்

ஆறுமுகன் : - கடப்பமாலை பொருந்துகின்ற வடிவத்தோடு (சூரனாகிய மாமரத்தைக்கோறல் செய்ய) கடலின்கட் சென்று இடமகன்றமலை களின்கட்டங்கி வள்ளிநாயகியாரைத் திருமணஞ் செய்ய யானைமுகப் பிரானை யெதிருற்று எனப்பொருள் கொள்க.

கடம்பு - கடப்பமாலை : ஆகுபெயர். கடலகம்புகுதல் - சூரனைக்கோறல் செய்யக்கடலின்கட் சேறல். இடம்படுகோடு - இடமகன்ற குன்றுதோறாடல் செய்யுமிடங்கள். இபமுகன் - யானை வடிவங்கொண்ட மூத்த பிள்ளையார்.

குறுமுனி : - கடத்தினைத் தனக்குப் பிறப்பிடமாகக்கொண்டு கட லினைத் தன்னுள்ளே செல்ல இடமகன்ற பொதியின் கட்டங்கி (காவிரியாறாகக் கமண்டலத்திலுள்ள நீரைக் கவிழ்த்த) யானைமுகத்தையுடைய விநாயகரைப் பொருந்தித் தவம்பெற்றதால் எனப் பொருள் கொள்க.

கடம் - கலசம், இதனைக் கலசயோனியென்னும் வடமொழிப்பெய ரானுமறிக. கடலகம் புகுதல் - (இந்திரன் வேண்டுகோட்கிணங்கி விருத்திரனைக் கோறல் செய்ய) கடலினையுண்ணல். கோடு - ஈண்டுப் பொதியமலை. இபமுகனேர்தல் - விநாயகரை எதிர்ப்படுதல்.

திருமால் : - முல்லைநிலத்தின்கட் டோன்றுதல் செய்து மச்சம் கூர்மம் முதலிய வடிவங்கொண்டு கடலின்கட் சென்றுழக்கி இடப்பக்கலிற் பாஞ்சசந்யமென்னுஞ் சங்கினைத்தாங்கி கசேந்திரனுக் கருள்செய்தலால் எனப்பொருள் கொள்க.கடம் - ஈண்டு முல்லைநிலம். கோடு - சங்கு. இபமுகன் - கேஐந்திரன்.

(76)

 கலைவளங் கோட லானுங் கரமலை யிருந்த லானும்
 நிலனிலை யாகுந் தோற்ற நிகழ்தரு புணர்ப்பி னானும்
 அலர்புக ழீசன் மாயோ னகத்தியன் மாதர்வெற்பென்
 றிலகுமிவ் வைவ ரோடு மிணைவது பொருநீர் நீத்தம்.

(இ - ள்.) கரையை மோதுகின்ற நீரோடுகூடிய வெள்ளமானது தன்னாற் கலக்கப்பட்ட வளங்களைக் கொள்ளுதலானும், கையோடு கூடிய மலையினையொத்த நதிசரமென்னும் யானைகள் தங்குதலானும், பூமியிலுள்ள உயிர்கள் நிலைத்தலையுடையதாகுங் காட்சியை உளவாக்குஞ் சம்பத்தானும், விரிந்த புகழினையுடைய இறைவனும், திருமாலும், அகத்தியனும், பெண்களும், மலையும் ஆகிய ஐவரையும் ஒத்தது.

(வி - ம்.) மலையினையுஞ்சேர்த்து ஐவரென்னு முயர்திணை முடிபாற் கூறியது மிகுதிபற்றிய முடிபென்க. கலைவளம் - தன்னாற் கலைக்கப்பட்ட வளம். கரமலை - யானை. (கிரிசரம், வனசரம், நதிசரமென்னு மூவகை யானைகளில் நதியிலுற்பத்தியாகும் யானைக்கு நதிசரமென்று பெயர்.) உலகின்கணுள்ள ஆன்மாக்கள் உடம்போடு காணப்பட்டு நிலைபெறுந் தன்மை நீரானுளவாதலான் "நிலனிலையாகுந் தோற்ற நிகழ்தரு புணர்ப் பினானு" மென்றார். நிலன் : ஆகுபெயர். நிலையாகுந்தோற்றம் - உடம்பினொடு நிலைபெறுங்காட்சி. புணர்ப்பு -
சம்பந்தம்.