பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்351

(வி - ம்.) உண்மைப் பொருளின்றன்மை செவியறிவுறுத்தலின்
மேனின்றது.

(82)

 அன்ன வூர்திய கந்தைய கழ்ந்தொரீஇத்
 துன்ன ரும்பயன் றுய்ப்பவ ழங்கிய
 முன்ன ருந்தணி கைக்கொரு முன்னவ
 இன்னு மோர்வர மீகென வேண்டுவான்.

(இ - ள்.) அன்னத்தை வாகனமாகக்கொண்டு செலுத்தும் பிரமனது அகங்காரத்தை வேரோடுங்கல்லி நீக்கி யாவருமெய்துதற்கரிய பெரிய பேற்றினை யனுபவிக்க வழங்கியருளிய நினைத்தற்கருமையாகிய தணிகா சலத்தின் கண்ணுள்ள ஒப்பற்ற முன்னவனே! வேறுமொரு வரமருளிச் செய்வாயென வேண்டுகின்றான்.

(வி - ம்.) அன்னவூர்தி - பிரமன். முன்னவ - விளி, ஈகென விகாரம்.

(83)

வேறு

 விமலமா ரனந்த ரூபமா தேவ
           விச்சுவ நாதமா போக
 சமன்வித சர்வா பின்னவென் றுரைத்துத்
           தைமதிப் பூசநாட் புலரிக்
 கமலமும் வளையு மப்பெயர் நிதிதற்
           கண்டவர் தமக்கெலா முதவ
 இமிழ்திரைக் கரத்தி னேந்திய தெனமிக்
           கிணங்குமிந் நதிப்புனல் படிந்தோர்.

(இ - ள்.) மலமற்ற பலவகைப்பட்ட வடிவுடையவனே! மகா தேவனே! உலகிற்குத் தலைவனாயுள்ளவனே! வரம்பிலின்புடையவனே! எல்லாவற்றிலுஞ் சமமாக வபின்னமாகக் கலந்துள்ளவனே! என்று சொல்லித் தைத்திங்கள் பூசநாளின் வைகறையின்கண் தாமரை மலரையும், சங்கினையும், அப் பதுமநிதியினையும், சங்கநிதியினையும் தம்மைப் பார்த்தவர்க்கெல்லாமளிக்க (அந்நதி) ஒலிக்கின்ற அலையாகிய கரங்களினேந்தினாற்போலப் பொருந்தும். இந்நதியின்கண்
மூழ்கினவர்.

(வி - ம்.) விமலம் - மலமின்மை. விசுவம் - உலகம். அபின்னம் - பின்னமில்லாமை; பின்னம் - வேறுபாடு. மதி - மாசம். நாள் - நட்சத்திரம். நிதியை யுதவக் கமலமும் வளையு மிணங்கும் புனலெனக் கூட்டுக.

(84)

 கேவல சகலங் கடந்தவைந் தவத்தைக்
           கிளரொளி முத்தியை யுறுக
 தேவசின் மயவிக் கிரகவத் துவய
           சிவசச்சி தானந்த நிரிக