| | மேவரு சங்க பூரண நிமல | | | வெனமுக்கால் விளம்பிமூ வருடம் | | | தாவருங் கண்ண பக்கத்து மூன்றா | | | மிருத்தைதொ றாடுநர் தாமும். |
(இ - ள்.) நித்திய கேவலத்தையும், சகல கேவலத்தையுங் கடந்த சுத்தாவத்தை ஐந்தனிடத்தில் விளங்குகின்ற வீட்டின்பினையடைக. ஒளியுடையவனே! ஞானமயமாகிய வடிவுடையவனே! (ஆன்மாக்களிடத்து) இரண்டறக் கலந்துள்ளவனே! மங்களப்பொருளா யுள்ளவனே! உண்மையறிவானந்த வடிவாயுள்ளவனே! துன்பமில்லாதவனே! பொருந்துகின்ற எங்குங்கலந்து நிறைவுற்றிருப்பவனே! மலமற்றவனே! என்று மூன்று முறை கூறி மூவாண்டுகள் கெடுதலற்ற கிருட்டிணபக்கத்துச் சதுர்த்தசியின்கண் அப்புனலில் மூழ்குகின்றவர்களும். (வி - ம்.) கேவலம் - நித்யகேவலம். சகலம் - சகலகேவலம்; கேவலமென்பதனைப் பின்னுங்கூட்டுக. ஐந்தவித்தை - சுத்தாவத்தை. நிரிக - துன்பமில்லாதவனே! கண்ணபக்கம் - கிருட்டிணபக்கம், கண்ணன் - கரியவன், இதனைக் "கருங்கண்ணனை யறியாமை நின்றோன்ழு் என்னுந் திருக்கோவையடியானு முரையானு முணர்க. முதற்பக்கந் தொடங்கி மூன்று வட்டமாக வருகிற ஐந்து பக்கங்களின் பெயர் நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணையாம். 1, 6, 11 நந்தை. 2, 7, 12 பத்திரை. 3, 8, 13 சயை. 4, 9, 14 இருத்தை. 5, 10, 15 பூரணை. இவ்வாறிருத்தலின் கண்ணபக்கத்து மூன்றாமிருத்தை சதுர்த்தசியென்க. இதன் விரிவை - "நந்தைபத் திரையி னோடு நாட்டிய சயையி ருத்தை - முந்துபூ ரணையாம் பக்க முதற்றொட்டு மூன்று வட்டம்" எனவரும் நிகண்டானறிக. (85) | | பெருகுநின் கருணைத் திறத்தினா லடியேன் | | | பெற்றவிப் பேறெலாம் பெறுக | | | தெருளிலர் பாவத் திறத்தின ரேனுஞ் | | | செப்புமந் திரத்தொடெந் நாளில் | | | பொருவிலிந் நதியிற் படியினு மவரும் | | | புகர்மலப் பிறவியை யொழிக | | | குருபர விவையும் வழங்கிமெய்ஞ் ஞானங் | | | கொடுமதி யெனமுறை துதித்தான். |
|