| (வி - ம்.) முற்செய்யுளில் ஆடுந ரென்னுஞ்சொல் இச்செய்யுளிலுள்ள பெறுகவென்னுஞ் சொல்லோடு முடிந்தது. தெருள் - அருள். (86) | | வேட்டநல் வரங்க ளளித்துவேற் றடக்கை | | | விண்ணவன் மீட்டுமீ தருளும் | | | வாட்டுமா ணவத்து மாதவ சேய்க்கண் | | | வதிந்திந்த நதியைநின் குகையைச் | | | சேட்டொளி மோலித் தேவர்சூழ் நமையுஞ் | | | சிந்தையி னினைந்துபோற் றுநரும் | | | நாட்டவர் பணியுந் தலைமைபெற் றீற்றி | | | னலத்தகு முத்தியை யுறுக. |
(இ - ள்.) நந்திப்புத்தேள் விரும்பிய வரங்களைக் கொடுத்து வேலாயுதத்தைத் தாங்கிய முருகக்கடவுள் மறுபடியுந் திருவாய் மலர்ந்தருள்வான். கெடுத்த ஆணவத்தினையுடைய பெரிய தவத்தினையுடையவனே! சேய்மைக்கட்டங்கி இந்நதியினையும் நீ தவஞ்செய்த குகையினையும் பெருமை பொருந்திய ஒளியோடு கூடிய முடியினையுடைய தேவர்கள் சுற்றிவணங்கும் நம்மையும் மனத்தின்கண் நினைந்து துதிக்கின்றவர்கள் உலகின்கண் உள்ளார் வணங்கும் தலைமைப் பாட்டினையடைந்து முடிவில் நன்மை பொருந்திய வீட்டினையு மடையக்கடவார்கள். (வி - ம்.) சேடு - பெருமை. மோலி - கிரீடம். வாட்டுமாணவத்து மாதவவென்பதனை - "விட்டவுண்டியர்" போலக் கொள்க. (87) வேறு | | இழிஞரே யாக விலங்குபுள் ளாக விணர்மலர்த் தருமுத லாக | | | வழிமதுக் கமழுங் கணிகவெற் பகத்து வதியினும் வாழுநா ளிறினும் | | | கழிசிறப் பளிக்கு நம்முடை யுலகங் கலந்தனர் வாழ்கவென் றருளி | | | விழிபொழி யருளி னழுத்திவே றிருந்து மெய்யரு டெளிப்பவ னானான். |
(இ - ள்.) தாழ்ந்தோராயினுமாகுக. விலங்கு பறவையாயினுமாகுக. கொத்துக்களோடுகூடிய மலர்களையுடைய மரங்களாயினுமாகுக. இழிகின்ற தேன்மணம் நாறு தணிகைமலையிடத்து வாசஞ்செய்யினும், இறப்பினும், மிக்க சிறப்பினைத் தரும் நமது கந்த வுலகத்தைக் கலந்தவராகி யாண்டுவாழ்க வென்றருளிச்செய்து தனியிடத் தெழுந்தருளியிருந்து அருளினால் மெய்ப்பொருளாகிய முப்பொருள்களினிலக்கணத்தைச் செவியறிவுறுப்பவ னாயினன். (வி - ம்.) ஆக மூன்றும் விகற்பப்பொருளில் வந்தன. வாழுநாளிறுதல் - இறத்தல். சிறப்பு - மேன்மை. நம்முடையயுலகு - கந்தவுலகு. விலங்கு பறவைதரு முதலியன அஃறிணையாக இழிஞர் என்பதொன்றுயர் திணையாகவும் கலந்தனரென உயர்திணை முடிபுபெற்றது சிறப்பினாலெனக் கொள்க. (88) |