| (இ - ள்.) அவ்வைந்தனுள்ளே பதிப்பொருள் இயற்கையுணர்வான் முற்றுமுணர்ந்து உயிர்களின் பரிபாக நிலையினுக்கியையச் செவியறிவுறுத்துவதாகிய மிக நுட்பமாகிய அநாதிமுத்த சித்துருவாகும். உயிர்கள், அப்பதிப்பொரு ளறிவித்தால் அறிந்து நிற்பதாகிய தூலமாகிய அநாதி பெத்த சித்துருவாம். ஆணவமலம் அவ்வுயிர்கள் (தமக் கெஞ்ஞான்று முறவாகிய) பதிப்பொருளினோடு (அவனாண்டான் நாமடிமை யென்றுணர்ந்து) கலவாவண்ணம் அத்துவிதமாகக் கலந்து (புவனங்களிற்) பிறவியிற் செலுத்துவதாம். (அவ்வாணமலத்தினை நீக்குவதற் கவ்வாணவமலத்தின் பின்னர் வந்து) பொருந்துகின்ற அத்தன்மைத்தாகிய மாயை பிரபஞ்ச வடிவமாகிய தொகுதியையுடையது. பல்வேறு வகையாகக் காரியப்பட்டுவரும் கன்மம் அப்பிரபஞ்சத்தின் கண் இன்பதுன்பமாகிய வுணவாயுள்ளது. (வி - ம்.) செறிந்து - நிறைந்து. வையகம் - ஆகுபெயர். கருவித்து - தொகுதியையுடையது. உறு அந்த மாயை எனப் பிரிக்க. (91) | | உணர்வெ ழாச்செயிர் வலியினா லுறவினை யிழந்து | | | தணவு றாதவா ணவத்தினைத் தலைப்படு முயிர்கட் | | | கணவு தாயென விரங்கியா ரருளினாற் பருவப் | | | புணர்வு தேர்ந்துடல் கரணமும் புவனமும் பொருத்தி. |
(இ - ள்.) அறிவு தோன்றா (வண்ணந் தடைசெய்து நின்ற) ஆணவமல சத்தியினால் (தன்னோடு கலந்து நின்றறிவினைத் தோற்றுவிக்கும்) சிற்சத்தியினுபகாரத்தை யயர்த்து (தன்னொடு) நீங்காது அத்துவிதமாகக் கலந்துள்ள ஆணவமலத்தினாற் கட்டுண்டு கேவலாவத்தையிற்றங்கிய வுயிர்கட்கு உற்றுழி யுதவுந்தாய்போல (அவ்வுயிர்களோடத்துவிதமாக் கலந்துள்ள திரோதானசத்தி) இரக்கங்கொண்டு (கைம்மாறு கருதாத) நிறைந்த கருணைப் பெருக்கினால் அவ்வப்பருவவியல்பு பொருந்துதலை யறிந்து (அவ்வுயிர்கள் அக்கேவல நிலையினீங்கி அறிவிச்சை செயல்கள் நிகழ்தற்கேதுவாகிய) மூவகையுடலினையும், அவைகட்குரிய கரணங்களையும், புவனங்களையும் இயையும் வண்ணம் செய்து. (வி - ம்.) எழாவென்னு மீறுகெட்ட பெயரெச்சம் செயிரென்னும் பெயரொடு முடிந்தது. மூவகை யுடலாவன - காரணசரீரம், கஞ்சுகசரீரம், குணசரீரமென்பனவாம். இவற்றுட் காரணசரீரம் - அசுத்தமாயையிற் கலக்குண்டபாகம். கஞ்சுகசரீரம் - காலம், நியதிகலை, வித்தை, அராகமென்னு மைந்து தத்துவங்கள். குணசரீரம் - சத்துவம், இராசதம், தாமதமென்னு முக்குணங்களும் வெளிப்படாம லிருப்பது. இவை மூன்றையும் பரசரீரமென்பர். (92) | | உற்ற மாயையோ டாணவ மொழிந்தொளி ரறிவே | | | முற்றும் வானுரு வெனக்கொளு முதலிலா முதல்வன் | | | பற்று மாயையிற் படர்வினைப் பாலவா முயிர்கட் | | | கிற்று றாவுட லொடுமிறு முடன்முத லியைத்து. |
(இ - ள்.) (எங்கும் நிறைந்த அறிவினைத் தடை செய்யும்படி) பொருந்திய மாயாமலமும் ஆணவமலமும் இயல்பாகவே நீங்கி விளங்கும் |