பக்கம் எண் :

356தணிகைப் புராணம்

அறிவினையே உயர்வாகிய திருமேனி முழுவதுமாகத் தாங்கித் தனக்கொரு தலைவனையன்றி யளவிலாற்றலையுடைய ஆன்மநாயகர் போகங்களை நுகருமாறு தமக்காதாரமாகக்கொள்ளு மாயேயத்தையடைந்து போக்குவரவு செய்தனுபவிக்கின்ற வினைப்பகுதியுடைய உயிர்களுக்கு (கொள்ளிவட்டமுங் காற்றாடியும்போலக் கீழுமேலும் போக்குவரவு செய்தற்கேதுவாகிய) (மகாசங்கார காலம்வரையில் நிலைபேறுடைய) நுண்ணுடம்புடனே) (போகநுகர்தற்குரிய) தூலவுடலினை ஆதிக்கண்ணே சேர்த்து.

(வி - ம்.) மாயை - மாயாமலம். அறிவே வான் உருமுற்றும் எனக்கொளும் முதல்வனெனக் கூட்டுக. மாயை - ஈண்டு மாயேயம். படர்தல் - போக்குவரவு செயல். "எல்லைமூவைந்து நாள்களுளவென இமைக்குங் கண்ணையுடையராகிய தேவர்களை அமரர்களென்று உபசரித்துக் கூறுதல்போல மகாசங்கார காலம்வரை அழியாது நிலைபெற்றுப் பின்னரழியுஞ் சூட்சுமவுடலை "இறுமுடலென்றது உபசார வழக்கமென்க. சூட்சுமவுடல் - தன்மாத்திரை யைந்தும் மனம்புத்தி சித்தமுமாகிய வெட்டுமாம். இறுமுடல் - தூலவுடல்.

(93)

 அருவு ருத்திறத் துடலுயி ருலகமாய் வேறாய்
 மருவு மற்றவற் றுடனுமாய் வல்வினைக் கேற்பக்
 கருவி முற்றவுந் தொழிற்படுத் துணவினைக் காட்டிப்
 பொருவி னற்பதம் புகுத்துவான் புகர்மலங் கழிக்கும்.

(இ - ள்.) தூலசூக்குமமென்னு மிருவகையுடலோடுகூடிய உயிர்களாகிய உலகமாயும், பொருட்டன்மையினாலே வேறாய சிவமாயும், (அவ்விருதன்மைக்கும் பொதுவாய் இருவினைக்கியையத் தொழின் முயற்சியில் முனைத்துப்) பொருந்தும் அவ்வுயிர்களோடுடனாயும் (இரண்டறக் கலந்துநின்று) (அருவுருவென்னு மிருகூறாகிய) வலிய இருவினைக்கு இயைய (தமது ஆணையினாலே) தத்துவத்தொகுதி யாவையும் (போக்குவரவாகிய) தொழிலின்கண்ணியக்கிப் போகத்தினைப்புசிப்பித்து ஒப்பில்லாத வீட்டின்பத்தின்கண் நிலைபெறுத்தும் பொருட்டு (உயிர்க்குற்றமாகிய) ஆணவமலத்தினை நீக்குவான்.

(வி - ம்.) அருவுருத்திறத்துடலுயிர் - அருவும் உருவுமாகிய உடலோடுகூடிய உயிர்களாகிய வுலகம். வல்வினை - அருவுமுருவுமாகிய இருவினை. கருவி - தத்துவத்தொகுதி. உணவினைக்காட்டி -
போகத்தையுண்பித்து. புகர்மலம் - உயிர்க்குற்றமாகிய ஆணவமலம். இப்பாட்டினுக்குப் பிறவாறுமுரைப்பர்.

(94)

 இரும்பு சேர்ந்தெரி யழற்றினு மெரியுடைத் தொழிலே
 இரும்பி னுக்கழற் றுவதிலை யிரும்படைப் பாதி
 விரும்பு நான்முக னாதியோ ரிடைவிளைத் துழியும்
 அரும்பி யாங்குமீட்டொடுக்குமவ் வரனுடைத் தொழிலே.

(இ - ள்.) தீயினைக்கூடி யிரும்பு சுடுதற்றொழிலைச் செய்யினும், (அச்சுடுதற்றொழில்) இரும்பினுக்கியல்பானில்லையாகும். (அச்சுடுதற்றொழில்) தீயின் றொழிலேயாகும். (அதுபோல) (குருடர்கோலினையும்