| குழவிகள் பாலினையும் விரும்புமாறு) பெரிய படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய தொழில்களை விரும்பும் பிரமன் முதலிய தேவர்களை நிலைக்களமாகக் கொண்டு இறைவன் செய்தவழியும் தோற்றியவாறேயொடுக்கு மகாசங்கார காரணனாகிய இறைவன் றொழிலேயன்றி வேறொருவர் தொழிலன்று. (வி - ம்.) அரும்பியாங்கு மீட்டொடுக்கல் - (சகசமலம் நீங்காமையால்) தோன்றியவாறே யொடுங்குமாறு செய்தல், இதனை, "தோற்றிய திதியே யொடுங்கி மலத்துளதாமென்னும், "சிவஞானபோதச் சூத்திர வடியானுணர்க. (95) | | அனாதி பந்தமோ டனுபந்த மாவது மலமே | | | அனாதி பந்தமோ டனுபந்த முறுவது முயிரே | | | அனாதி பந்தமோ டனுபந்த மிரண்டுமில் லாதான் | | | அனாதி முத்தனா யனாதியே கலந்தரு ளமலன். |
(இ - ள்.) அனாதிக்காலத்தே விடுபட்டவனாய் அனாதிக்காலத்தே அவ்வான்மாக்களோ டிரண்டறக் கலந்திருக்கின்ற மலமற்ற சிவபெருமான் அனாதிபந்தமாகிய ஆணவமலத்தினுடனே அனாதிபந்தமாகியமாயை கன்மமாகிய இரண்டினையும் இயல்பினீங்கியவனே யாவன். அநாதிபந்தமாகிய ஆணவமலத்தினையும் அதனைத் துமித்தற்குப் பின்னர் வந்தடைந்த மாயைகன்ம மலங்களையுமுறுவது உயிரேயாம். அவ்வனாதி பந்தமாவதும், அனுபந்தமாவதும் மலமேயாம். (வி - ம்.) அனாதிபந்தம் - ஆணவமலம். அனுபந்தம் - மாயைகன் மங்கள். அனாதிபந்தமாகிய ஆணவத்தினைத் துமித்தற்குப் பின்னர் வந்தடைந்த மலத்திற்கு அனுபந்தமெனப் பெயர். அனு - பின். (96) | | விதந்த யாவையும் புரிந்துமோர் விகாரமின் மையினால் | | | சுதந்தரத்தினா லொருவழி குணங்கலப் பதனால் | | | இதந்தொ லாருயிர்க் கேற்றுசீர்த் திறமுத லானும் | | | முதிர்ந்த பேரொளி முதல்வனை யொப்பதொன் றிலையால். |
(இ - ள்.) மேலே சிறப்பித்துக் கூறிய படைத்தல் காத்தல் முதலிய தொழில்கள் யாவையும் செய்தும் வேறுபாடின்மையானும், தன்வயத்தனாதலுடைமையானும், ஒரு பெற்றித்தாய் சிற்சத்தி கலந்திருத்தலானும், அநாதிபெற்ற சித்துருவாய உயிர்களுக்கு இன்பத்தினைக் கொடுத்தருளும் சிறப்பினையுடைய தன்மையைப் பொருந்துதலானும் சிற்சத்திவடிவுடைய சிவனாகிய முதல்வனை யொக்கும் வேறு பொருளொன்றும் இன்று. (வி - ம்.) குணம் - ஈண்டுச் சிற்சத்தி. முதிர்ந்த பேரொளி - சிற்சத்தி. இதனால் எண்குணத்தானாதல் கூறினாரெனக் கொள்வாருமுளர். (97) | | பரவு மிப்பொரு ளொன்றலாற் பதியில்லை வேறு | | | விரவு மாருயிர் சிற்றறி விற்பல விதத்த |
|