| | இருண்ம லத்தின வீண்டுறு சகலத்த வசிப்ப | | | வரும்வி யாபகத் தனமலந் தபமுத்தி யடைவ. |
(இ - ள்.) (வேதாகமங்களாற் புனைந்து) தோத்திரஞ் செய்யப் பெறும் (எடுப்புமிணையுமில்லா) இப்பதிப்பொருளொன்றேயல்லாமல் வேறுபதிப் பொருளில்லை. (அப்பதிப்பொருளின் வேறாய் அதனோடு கலந்த) அரிய உயிர்கள் மூவகைப் பாகுபாட்டையுடையன. கண்ணொளியை மறைத்தலைச் செய்யுமிருளைப்போல, தமது சொரூபத்தினை மறைத்தலைச்செய்யு மாணவ மலத்தினையுடையன. செறிந்த மாயாகலைகளோடு கூடின. தம்மை விளக்கும் வியஞ்சகம் விளக்குமளவு விளங்கும் வியாபகத்தையுடையன. மலம் நீங்க முத்தியினை யடைவனவாம். (வி - ம்.) பலவிதத்த - பிரளாயகலர், விஞ்ஞானகலர், சகலர் எனு மூவகையன. ஈண்டுறு சகலம் - மாயா கலைகளோடுகூடிய சகலம். வசிப்பவரும் வியாபகத்தன - வியஞ்சகம் விளங்குமளவு விளங்கும் வியாபகமுடைய. வியஞ்சகம் - விளக்குங்கருவி. உணர்வெழா வென்பது முதல் பரவுமிப்பொருளென்பதுவரை பதியிலக்கணங்கூறி, விரவுமாருயி ரென்பது முதல் உயிரிலக்கணங் கூறுகின்றார். (98) | | தொகையி றந்தன வாயினுந் தொல்லையா ணவநோய் | | | தகைய நின்றன வதனொடு கருமமுந் தகையும் | | | வகையி னின்றன வவற்றொடு மாயையு மருவும் | | | மிகையி னின்றன வென்னமூ வகையின விதப்பின். |
(இ - ள்.) இவ்விலக்கணங்களையுடைய வுயிர்கள் எண்ணினெல்லையினைக் கடந்த அநேகமாயினும், சிறப்புவகையா னெடுத்துச் சொல்லப்புகின் பழமையாகிய ஆணவமலமாகிய நோயானுளதாகிய மயக்க மாத்திரமே பந்திக்க நின்ற விஞ்ஞானகலரெனவும் அம்மலபந்தத்துடனே (அதனை நீக்குதற்குப் பொருந்திய) கரும மலமும் பந்திக்கும் வகையினின்ற பிரளயாகலரெனவும் அவ்விருமலங்களுடன் மாயாமலமும் பந்திக்கு மிகைப்பாட்டினின்ற சகலரெனவும் மூன்று வேறுபாட்டினையுடையனவாம். (வி - ம்.) விஞ்ஞானகலர் - ஒருமலமுடையார். பிரளயாகலர் - இருமலமுடையார். சகலர் - மும்மலமுடையார். இறைவனை ஏகனென்றும், உயிர்களை அநேகனென்றுங் கூறியிருத்தலின் தொகையிறந்தன வென்றார். (99) | | சத்து நேர்தனக் கெனவறி விலாதன தணவா | | | மெத்த சத்தென வறிவுமே வாதவு மல்ல | | | ஒத்த றிந்தவுங் கனவத்திற் கலங்குமூக் கத்த | | | சத்த சத்தையு மறிதலிற் சதசத்தா வனவே. |
(இ - ள்.) இயல்பானறியுஞ் சிவமாகிய உண்மைப்பொருள்போல (வியஞ்சகத்தானறிதலின்) இயல்பானறியுமறிவு தனக்கென இல்லா தனவும் (உலகியலனுபவ முண்மையான்) நீங்காத நிறைந்த உலகத்தி |