பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்359

னைப்போல அறிவினைப் பொருந்தாதனவுமல்ல. பொருந்தியறிந்தனவாகிய இருவகை யறிவினையும் கனவு கண்டாற்போல மாறியுணருந்தொழின் முயற்சியுடையன. (ஆகையான்) சிவமாகிய உண்மைப் பொருளின்றன்மையும் (உலகமாகிய அசத்துப் பொருளின்றன்மையுமின்றி) அவ்விரண்டனோடுங் கலந்து நின்று) (அதுவதுவா) யறிதலின் (அவ்விரண்டினும் வேறாய) சதசத்தென்னு மியல்பினையுடையனவாம்.

(வி - ம்.) ஆன்மா சத்துடன் கூடிச் சத்தினையும், அசத்துடன் கூடியசத்தினையும் அதுவதுவாய் நின்றறியுந் தன்மையுடையதென்பது தோன்ற "சத்தசத்தையு மறிதலிற் சதசத்தாவனவே" யென்றார். நேர் ; உவம உருபு. இன் : ஐந்தாவதொப்புப் பொருள். இருவகையறிவு - சத்தப்பிரபஞ்சத்தினையும் அர்த்தப் பிரபஞ்சத்தினையுமறியு மறிவு.

(100)

 மூல வாணவ மயக்கலின் முதல்வனைப் பின்னிட்
 டேலும் வான்றரை நரகத்தி லின்பதுன் பருந்தும்
 வேலை நோய்முத லடுத்துழி வெறுப்பன வெறுக்கை
 கோல மாதர்மற் றடுத்துழிக் குளிர்வன நாளும்.

(இ - ள்.) (செம்பிற்களிம்புபோல) அநாதிக்காலத்தே (தன்னறிவைத் தடைப்படுத்திய) ஆணவமல மத்துவிதமாகக் கலந்து மயக்குதலினாலே தமக்கென்றும் நீங்காத உறவாகிய சிவமாகிய முதல்வனை அறியாமல் (பிறவியிலகப்பட்டு) தாங்கள் பொருந்துதற்குரிய மேல் கீழ் நடுவென்னும் மூவகை யுலகங்களினும் போக்குவரவு செய்து (தத்தம் தொழின் முயற்சிக்கியைந்தவாறு இன்பினையும், இன்பதுன்பங்களையும். துன்பினையும் நுகராநிற்கும். (அங்ஙனம் நுகருதல் எற்றாற்பெறுதுமெனின்) தொழின் முயற்சி நோய் முதலியவை வந்தவிடத்துத் துன்புறுவனவும் பொன், அழகிய பெண் முதலியவை பொருந்தியவிடத்து இன்புறுவனவுமாகிய செயலுண்மையான் விளங்கும்.

(வி - ம்.) இன்பதுன்பு என்பதனை இரட்டுற மொழிந்து கொள்க. வேலை - தொழில், கோலம் - அழகு.

(101)

 தனைநி கர்ப்பருஞ் சத்தசத் துறாதசத் தறியா
 தனைய தாகலி னதற்கொன்றும் வேண்டுவ தில்லை
 வினையும் பல்வகைக் கரணமும் வேறுவே றுடலும்
 வனையு மண்டமும் யாவையு முயிர்க்கென மதியாய்.

(இ - ள்.) தன்னையொப்பது மிக்கது மில்லாத சிவமாகிய உண்மைப்பொருள் அறிவில்லாத உலகத்தினை நுகர்ந்தறியாது, உலகமாகிய அசத்துப்பொருள் அறிவில்லாத சடப்பொருளாம். அங்ஙனம் அறியாத தன்மையுடையதாதலினாலே (தொழில் கரணம், உடல், புவனம் முதலிய யாவும் அதனால் விரும்பப்படுவதில்லை. ஆகலிற் பாரிசேட அளவையான்) இருவினையும், (அவ்விருவகைப் பயனை நுகர்தற்குரிய) பலவேறு வகைப்பட்ட கருவிகளும், (அக்கருவியின் தொகுதியானாய) பலவேறுவகை வினையினை யுடையனவாகிய உடல்களும், அவைகட்கு நிலைக்களனாகப் படைக்கப்பெற்ற புவனங்களும், அவையிற்றினுக் கங்கமாகிய ஏனையவும், அதுவதுவா யுணர்ந்தனுபவிக்கு முயிர்களுக்கென்றே யறிந்துகொள்வாயாக.