| (வி - ம்.) 98ஆவது செய்யுள் மூன்றாவதடி முதல் 102ஆவது செய்யுள் முடிய ஆன்மவிலக்கணங் கூறினார். இனி 103ஆவது செய்யுள் முதல் பசுத்தன்மை செய்யும் ஆணவமலத்தினிலக்கணங் கூறுகின்றார். பாரிசேடம் -கூட்டிப் பிரித்தல். (102) | | கலாதி யிச்சையா திகள்வந்து கலாவுமா றன்றே | | | நிலாவி நெல்லுறு முளையென வாணவ முயிரிற் | | | குலாவு மிச்சையா திகளொரீஇக் குளிர்பதி மாட்டுச் | | | சுலாவு மிச்சையா திகளையுந் தோற்றுறா தணவும். |
(இ - ள்.) நெல்லின்மாட்டுப் பொருந்திய முளைத்தற்சத்தி வெளிப்படுவதற் கேதுவாகவிருந்த உமியினைப்போன்று ஆணவமலமானது ஆன்மாவின் அறிவிச்சை செயல்களைக் கலை, வித்தை, அராகம் என்னும் தத்துவங்கள் (மாயையினின்றுந் தோன்றி) வந்து, போகத்தை நுகர் விக்குமாறு கலந்து தனது சத்தியினை நிறுவுதல் செய்து, ஆன்மாக்களிடத்திற் பொருந்திய அறிவிச்சை செயல்களை ஒருவுவித்து (பிறவியாகிய கோடையின் வாடிய உயிர்களுக்குத்) தண்ணிய நிழலாம் பதிப்பொருளிடத்துப் பொருந்துகின்ற அறிவிச்சை செயல்களையும் விளங்க வொட்டாது அநாதியே அவ்வான்மாக்களைப் பொருந்தி நிற்கும். (வி - ம்.) தோற்றாது அன்றே அணவுமெனக் கூட்டுக. ஆணவ மலமானது ஆன்மாவின் அறிவிச்சை செயல்களை கலை, வித்தை, அராக மென்னுந் தத்துவங்கள் கலந்து போகந் துய்ப்பிக்குமாறு தனது சத்தியை நிறுவி ஆன்மாக்களின் அறிவிச்சை செயல்களை நீக்கிப் பதியிடத்துப் பொருந்தும் அறிவிச்சை செயல்களை விளங்கவொட்டாது அன்றே அணவுமென வினை முடிபு செய்க. முளையெனவும் பாடம். அன்றே - அநாதியே. (103) | | விழிப்பு ணர்ப்புறு மிருளென விராவிய தன்னை | | | அழிப்ப முற்றிய சத்தியுந் தன்வழி யாக்கி | | | ஒழிப்பின் மூன்றிடத் திருதிறத் தவத்தையோ ரைந்தும் | | | கழிப்பி லாதுயி ருறப்பல சத்தியிற் கதுவும். |
(இ - ள்.) கண்ணினிடத்துக் கலந்து நிற்கும் புறவிருளைப் போன்று, ஆன்ம சிற்சத்தியினைக் கலந்து தடைப்படுத்திய ஆணவ மலமாகிய தன்னை அழிக்கும்பொருட்டு விளைந்த திரோதான சத்தியையும் மலமென்னும் பெயருடையதாகச் செய்து (அத்திரோதானசத்தி தன்னை யொருவாற்றான்) நீக்கும்வேளை, கேவல, சகல, சுத்தமென்னும், மூன்றிடமாகிய காரணவவத்தைகளினும், மேலாலவத்தை, கீழாலவத்தையென இருவகையாகி நிகழ்கின்ற சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதமென்னும் ஐந்தவத்தையினையும் நீங்காதுயிர்கள் பொருந்தும்வண்ணம் பல்வேறு வகைப்பட்ட சத்திகளினாலே பொருந்தாநிற்கும். (வி - ம்.) ஒளியுடன் கூடின் ஒளியாயும், இருளுடன் கூடின் இருளாயும் நிற்றல் கண்ணிற்கியல்பாகலின், விழிப்புணர்ப்புறுமிருளென்றார். மூன்றிடம் - (கேவல சகல சுத்தமென்னும் காரண வவத்தையாகிய) |