| மூன்றிடங்கள் - இருதிறத்து. அவத்தையோரைந்து - கீழாலவத்தை, மேலாலவத்தையாகிய இவ்விருவகை பற்றிவரும் சாக்கிர சொப்பன சுழுத்தி, துரிய, துரியாதீதம் என்னும் ஐந்தவத்தைகள். (104) வேறு | | உறுதி பயக்குங் காரியங்க ளொருகா லத்துஞ் செயவொட்டா | | | திறுதி பயக்குங் காரியமே யெக்கா லத்து நிகழ்விக்கும் | | | செறியு முயிரி னல்லறிவை யெக்கா லத்துஞ் சிதைத்துவரும் | | | மறிய வுயிர்க்குப் புகரறிவை யெக்கா லத்தும் வளர்ப்பிக்கும். |
(இ - ள்.) (அவ்வாணவமலம்) மேற்கூறியாங் கைந்தவத்தையின் கட்பொருந்தும் ஆன்மாக்களின் ஞானசத்தியின் றொழிலைக் கெடுத்துக் கீழீர்த்துக் கொணருமாகலின், அவ்வான்மாக்கள் நல்ல பயனுடைய காரியங்கள் ஒன்றினை ஒருகாலத்துந் தோன்றச் செய்யாது, (அவ்வளவோ) அவ்வான்மாக்கள் பிறவியிற் சுழல அவ்வான்மாக்களுக்கு அஞ்ஞானத்தை எக்காலத்தினும் வளர்த்துவரும் (ஆகையால்) கேட்டினைத் தருவதாகிய காரியத்தினையே எக்காலத்துஞ் செய்விக்கும். (105) | | தூய நினைவைத் தூமொழியைத் தூய தொழிலைத் தோற்றாது | | | தீய நினைவைத் தீமொழியைத் தீய தொழிலைத் தவத்தோற்றும் | | | ஆய தனியா ணவப்பகையி னரட்டைத் தணிப்ப வுயிரடுக்கும் | | | மாயை யிரண்டு திறனாகுஞ் சுத்த மசுத்த மெனமாதோ. |
(இ - ள்.) நல்லெண்ணத்தையும், நல்லமொழியினையும், நல்ல தொழிலினையும் தோன்றவிடாமல் (அவைகளின் மறுதலையாகிய) தீய வெண்ணத்தையும், தீயமொழியினையும், தீச்செயலையும் மிகத் தோற்றுவிக்கும். (இங்ஙனம் விகாரப்பட்ட செயலுடன்) பொருந்திய ஒப்பற்ற ஆணவமாகிய பகையினாலுளதாகும் கேட்டினை நீக்கும் பொருட்டு அவ்வான்மாக்கள் துணையாகச் சம்பந்திக்கும் மாயாமலமும் சுத்தமாயை, அசுத்தமாயையென விரண்டு வகைப்படும். (வி - ம்.) 68ஆவது செய்யுள் மூன்றாவது அடி தொடங்கி 106-ஆவது செய்யுள் மூன்றாவது வரிவரை ஆணவத்தினிலக்கணங் கூறி அதன்மேல் அவ்வாணவத்தினை நீக்கப்போந்த மாயாமலத்தினிலக்கணங் கூறுகின்றார். (106) வேறு | | சுத்ததத் துவமோ ரைந்துநால் வாக்குந் | | | தொக்கவைம் பத்தொரக் கரமும் | | | கொத்துறு மெண்பத் தொருபதஞ் சத்த | | | கோடிமா மந்திரப் பகுப்பும் | | | மெய்த்தநா லேழா கமமிரு நூற்றே | | | ழுபாகமம் விரிந்தநால் வேதம் |
|