பக்கம் எண் :

36தணிகைப் புராணம்

(வி - ம்.) இனைவு - துன்பம்; பொய் - பொய்பாராட்ட லென்னுந்துறை; இதனை இந்நூல் களவுப்படலம் 'இயங்குந் திறனுடைந்' தென்னும் 92-ஆம் செய்யுளானறிக. இனிப் 'பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்' என்னுங் குறளின் கருத்திற்கிணங்கப் பொருள் கூறினுமமையும்.

(48)

 உயங்கு வாரல தின்புறா ரென்பதுண் மையினான்
 முயங்கு வாரைமுன் றுயர்செய்தன் முறைதெரித் தாங்கு
 வயங்கு லாவிய மாரவேள் பகழியாய் மலர்ந்த
 தயங்கு தேமல ரசோகங்க டழீஇயது குறிஞ்சி.

(இ - ள்.) இன்பமெய்தற்கு நிமித்தமாகிய வழிகளின் மனமொழிமெய்களைச் செலுத்தித் துன்பினை யடைகின்ற ஆடவர்களையல்லாமல் அவ்வழிகளின் மனமொழி மெய்களைச் செலுத்தாதவர்கள் இன்பத்தினை ஒருகாலத்தும் எய்தமாட்டாரென் றறநூல் கூறுவது எக்காலத்தும் உளதாந் தன்மையாதலினால் அம்முறைப்படி குறிஞ்சிநிலமானது பின்னர்க் கூடியின்புறுவாரை முன்னர்ப் புணரும் நிமித்தமாகத் துயருறுவிக்குந் தன் றன்மையை யாவர்க்குந் தெரிவித்தாற்போல வெற்றி பொருந்திய மாரனுக்கு அம்பாகி விளங்கிய தேனோடுகூடிய மலரையுடைய அசோக மரங்களைத் தழுவியது.

(வி - ம்.) செய்தன்முறை: வினைத்தொகை, அசோகு உணவை நீக்கி முன் துன்புறுத்திப் பின்பு புணர்ச்சிக்கே துவாயின்பஞ் செய்தலின் இடத்தினிகழ் பொருளின் றொழிலை இடத்தின்மேலேற்றிக் கூறினார். அசோகுமலர் மதனம்பென்பதனை "முல்லையசோகு" என்பதனானறிக. துன்புற்றாரல தேனையோ ரின்புறாரென்பதனை "துன்பமுற்றவர்க்கலாலின்பமில்லை" என்னுஞ் சிந்தாமணியானறிக.

(49)

பாலை

வேறு

 பகைத்துடிப் படுப்பவர் பகைக்கட் பாய்கலை
 உகைக்குமச் செய்கையா லுவப்பச் செய்வபோன்
 மிகைத்திறக் குமரிக்கு விழாவெ டுத்தஞர்
 துகைத்திருப் பதுதொகு முரப்புச் சூழலே.

(இ - ள்.) முல்லையுங் குறிஞ்சியு முறைமையாற் றிரிந்த பாலையானது பகைப் புலத்தின்கண் துடியென்னும் வாத்தியத்தை யடித்துச் செல்லுமியல்பினையுடைய மறவர்கள், போர்முனையின்கண் தாவிச் செல்கின்ற மானினைச் செலுத்தித் தமக்கு வென்றி தருந் தன்மையினால் தாங்களும் அவளை மகிழ்வித்தல் செய்வதுபோல மிக்க வீரத்தினையுடைய துர்க்கைக்கு விழாக்களைச் செய்ய துயரத்தைக் கெடுத்திருப்பதாகும்.

(வி - ம்.) பகைத் துடிப்படுப்பவர் - வேடர்; நிலங்கடந்தான்றாயதென்றாற் போல வாளா பெயராய் நின்றது: பகை - ஆகுபெயர்; கலைமான் - துர்க்கை வாகனம்; உகைத்தல் - செலுத்துதல்; மிகை- மிகுதி; குமரி - துர்க்கை; அஞர் - துன்பம்; 'அஞரறிவிலரே துக்கம்' என்னும் நிகண்டானறிக. துகைத்தல் - கெடுத்தல்; முரப்புச்சூழல் - கல்விர