பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்363

பிரமன், இந்திரன் ஏனைய தேவர்கள் முதலாக நிலைபெற்ற சகலவர்க்கத்தவர்களுக்கெல்லாம் அழகிய நல்ல தனுகரண புவன போகமாகிய நான்கையுந்
தோற்றுவிப்பதாம்.

(வி - ம்.) காலமுதற் பிரகிருதி வரையுள்ள ஏழனையும், மால் முதலிய தேவர்களுக்குத் தனுவாதிய நான்கனையும் கொடுப்பது அசுத்தமாயை என வினைமுடிவு செய்க. ஆன்மதத்துவ மிருபத்து நான்கையுந்தரும் பிரகிருதியென ஆன்மதத்துவத்தைப் பிரகிருதிக் கடையாக்குக.

(109)

 மயக்கிடு மாயா காரிய மிலையேல்
           வல்வினை நுகர்ச்சியு மில்லை
 துயக்குமவ் வினையின் கழிவுமாங் கெய்தா
           தொல்லையே சூழ்ந்தவா ணவத்தின்
 முயக்குமற் றொழித லரிதரி தாகு
           மூதுயிர் மாயகா ரியத்தின்
 இயக்குற லன்றி யிருவினை யீட்டா
           திவையின்றி யவையுமெய் தாவால்.

(இ - ள்.) மயக்கத்தைச் செய்கின்ற மாயையின் காரியமாகிய தனுகரணபுவன போகங்கள் இல்லையாயின் வலிய இருவினைப்பயன்களை ஆன்மாக்களுக்கு நுகருந் தொழிலின்றாம். அஃதின்றாக ஆன்மாக்களைத் துவளச் செய்யும் இவ்விருவினையின் நீக்குமாண்டெய்தாவாம். (அநாதியே செம்பிற் களிம்புபோலப்) பற்றிய ஆணவமலத்தின் கலப்பும் நீங்குதல் அதினுமரிதேயாம். ஆகலான் ஆன்மாக்களுக்கு மாயை கன் மங்களினியைபு இன்றியமையாது வேண்டப்படுவதாயிற்று. அநாதிபெத்த சித்துருவாகிய ஆன்மாக்கள் மாயா காரியமாகிய தனுகரணபுவனங்களுடனியைந்தாலன்றி நல்வினை, தீவினையாகிய, இருவினைகளையும் செய்யமாட்டாது. இவ்விரு வினையுமில்லாமல் அத்தனுகரண புவனபோகங்களு மெய்தமாட்டரவாம்.

(வி - ம்.) மாயாகாரியம் - தனுகரண புவனபோகங்கள். இவை - இருவினைகள். அவை : தனுகரண புவனபோகங்கள். இயங்குறலென்பது விகாரம். இங்ஙனம் கூறியவாற்றால் ஆணவமல நீக்கத்திற்கு மாயைகன்மங்களின் இயைபு வேண்டப்படுவதாயிற்று. ஆகவே மூல மூன்றுமுள் பொருளாதலறிக. இம்மலமுள் பொருளாதலை, "உள்ள மலமூன்று மாய வுகுபெருந்தேன் வெள்ளம் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல், மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக், கருவும் கெடும்பிறவிக் காடு" என வருந் திருவாசகத்தானறிக.

(110)

 இருவினை யென்ப மனமுதன் மூன்றி னியற்று மிதமகி தங்கள்
 பெருவினைப் பயன்கள் புண்ணிய பாவம் பேசுமிக் கருமத்தின் பயன்கள்
 மருவிடு மின்ப துன்பமா மவைதா மாய்வினவ் விருவினை தோற்றும்
 ஒருதனு விளைப்ப மற்றொரு தனுவி னுணப்படுங் கெட்டுங்கே டிலவாய்.

(இ - ள்.) ஆன்மாக்கள் மனவாக்குக் காயமென்னும் மூன்றினாலும் செய்யப்படும் இதம் அகிதமென்பனவே இருவினை என்று சொல்