பக்கம் எண் :

364தணிகைப் புராணம்

வார்கள். (நூல்களான் விதந்து) சொல்லப்படுவனவாகிய புண்ணியபாவங்கள் பெரிய இருவினையின் பயனாய்க் காரணமும் காரியமுமாய் இருக்கும். இப்புண்ணிய பாவங்களின் பயன்கள் (ஆன்மாக்களிடத்து) இன்பமும் துன்பமுமாகப் பொருந்தும். அவ்வின்ப துன்பங்களை ஆன்மாக்கள் நுகர்ந்து நீக்குங்காலத்துப் பின்னரும் அவ்விருவினையுளவாகும். ஓருடல் வினைகளைச் செய்ய வேறோருடலின்கண் வினைகள்கெட்டும். (பயன்கேடின்றி) வேறோருடம்பில் நுகரப்படும்.

(வி - ம்.) வினை செய்த பொழுதே யழியுமாலைத்தாதலின் அதன்பயன் அழியாது நுண்ணிதாய் நின்று தன்னைச் செய்தான் மாட்டுச்சேறலியல் பென்பார், "ஒருதனு விளைப்ப மற்றொரு தனு வினுணப்படுங் கெட்டுங் கேடிலவா" மென்றார். இதனை "பல்லாவு ளுய்த்து விடினுங் குழக்கன்று, வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் தொல்லைப், பழவினையுமன்ன தகைத்தேதற் செய்த, கிழவனை நாடிக் கொளற்கு" என்னும் நாலடியானுணர்க.

(111)

 மனமுதன் மூன்று மசைவற நின்று வந்திடு நல்வினை பலவே
 மனமுதன் மூன்று மசைவற நின்று வந்திடுந் தீவினை பலவே
 மனமுதன் மூன்றும் புடைபெயர் வுற்று வந்திடு நல்வினை பலவே
 மனமுதன் மூன்றும் புடைபெயர் வுற்று வந்திடுந் தீவினை பலவே.

(இ - ள்.) மனம், வாக்கு, காயமென்னும் மூன்று கருவிகளும் (நூல்களால் விலக்கிய காரிய காரியங்களில்) செல்லாம னிற்றலால்வருகின்ற நல்வினைகள் பலவாகும். அம்முக்கருவிகளும் (நூல்களில் விலக்கிய கருமங்களில் சென்று) சலனமின்றி நிற்றலால் வரக்கடவனவாகிய தீவினைகள் பலவாம். அம்முக்கரணங்களும் (நூல்களாலறிவித்த புண்ணிய காரியங்களிற்) புடைபெயர்ச்சி யுறலால் வரக்கடவனவாகிய நல்வினைகள் பலவேயாம். அம்முக்கருவிகளும் (நூல்களில்விதித்த புண்ணிய காரியங்களில் நிலைபெறாது) புடை பெயர்தலானே வரக்கடவனவாகிய தீவினைகளும் பலவாம்.

(112)

 தூயவா யமைக்கப் படும்வினை யெவர்க்குந் தூயவா யிருப்பன பலவே
 தீயவாய் விலக்கப் படுவன வெவர்க்குந் தீயவா யிருப்பன பலவே
 தூயவா யொருவர்க் கொருவருக் கொழியுந் தீயவா யிருப்பவும் பலவே
 தீயவா யொருவர்க் கொருவருக் கடுக்குந் தூயவா யிருப்பவும் பலவே.

(இ - ள்.) (நூல்களான்) தூயனவாக நியமிக்கப்படும் நல்வினைகள் யாவர்க்கும் நன்மையுடையனவாக விருப்பன பலவாம். (நூல்களான்) தீயனவென்று விலக்கப்படும் தீவினைகள் யாவர்க்குந் தீயனவாக விருப்பன பலவாம். (நூல்களான் விதித்த நல்வினைகள்) பெரியாரொருவர்க்கு நல்லனவாய் (நூனெறி யொழுகாத கீழோற்கு) விதியொழிந்து தீயனவாயிருப்பவும் பலவேயாம். (நூல்களான் விலக்கப்பட்ட) வினைகள் ஒருவர்க்குக் கருத்துவகையான் பொருந்துந் தூயனவாயிருப்பனவும் பலவேயாம்.

(113)

 நல்வினை திறம்பித் தீயவாய்த் தீய நல்லவாய் வருபவு முளவே
 வல்வினை மெலிய வினைகளாய் மெலிய வலியவாய் வருபவு முளவே