| | நல்வினை செயும்போ ததன்பயன் போலத் தீயவு நணுகலு முளவே | | | புல்வினை செயும்போ ததன்பயன் போல நல்லவும் புணர்தலு முளவே. |
(இ - ள்.) நல்வினையென் றியற்றப்படும் வினைகள் மாறுபட்டுத் தீயனவாகவும், தீவினையென் றியற்றப்படுவன நல்வினையாக மாறிவருவனவும் பலவுள்ளனவாம். (செயற்கரிய யாகம் முதலிய) வலியவினைகள் செயற்கெளிய மெலிய வினைகளாக மாறிவருவனவும், பலவுள்ளன. நல்வினைகளை யியற்றும்போது அந்நல்வினைப் பயன்போலத் தீவினைப் பயன்கள் வந்து சேறலும் பலவுள்ளனவாம். மெல்லிய தீவினைகளைச் செய்யும்போது அவ்வினைப் பயன்போல நல்வினைப் பயன்வந்து சேர்தலும் பலவுள்ளனவாம். (வி - ம்.) வல்வினை, மெல்வினை - சிவபுண்ணியம், பசு புண்ணியமென்க. வல்வினை : அசுவமேத முதலிய யாகஞ்செய்தவர் இவற்றால் வீடடையாமல் உலக பதவியடைதலால் "வல்வினை மெல்வினைகளாமென்றார். மெலியமெல்வினை - திருவலகிடுதல் வணங்கல் முதலியன. இவற்றான் வீடடைதலின் - "வலிய" வென்றார். முதலிரண்டடிக்கும் "புண்ணியம் பாதக" மென்னும் செய்யுளின் கருத்தைக் கொள்க. (114) | | புரிதரு முறையிற் பிறழ்ந்துயிர் தெய்வம் | | | பூதமென் றிவற்றினு ளொன்றால் | | | மருவுழி விழைந்த விழைந்தில விழைந்த | | | வன்றிவே றாவன வென்னத் | | | தரிவிதப் படுவ பயனிழி வினைக | | | டீர்வுசெய் யினுநுகர்ந் தன்றி | | | இரிதரா முழுது மிதுவிலை யானு | | | மியையும்பண் ணாமையும் பலிக்கும். |
(இ - ள்.) இனி, அவ்விருவினைப் பயன்களும் செய்த முறை வருதலன்றி, முன்செய்த வினை பின்னும் பின் செய்தவினை முன்னுமாக, மாறுபட்டுத்தான், தெய்வம் பிறவுயிராகிய மூன்றனுளொன்றதுவாகப் பொருந்துமிடத்து, அவ்வான்மாக்கள் விரும்பினவும், விரும்பாதனவும், விரும்பினவன்றி வேறாவனவுமாக, மூவகைப்பட்டு வருவனவாகும், தாழ்ந்த அதிபாதக முதலியவற்றின் பயன்கள் கழுவாய் செய்யினும் அநுபவித்ததன்றி முற்றிலும் நீங்காவாம். இப்பிராயச்சித்தம் விலை கொடுத்துப் பிறராலும் செய்யப்படும். ஒரோவழி இவ்விருவகையும் செய்யாதிருக்கவும் நீங்குவதும் உண்டு. (வி - ம்.) மருவுழிப் பயன்கள் திரிவிதப்படுவனவென முடிக்க.தீர்வு - பிராயச்சித்தம். முழுதுமிரிதராவென மாற்றுக. இதுவென்றது நல்வினை தீவினைகளாகிய இருவினையை யென்க. (115) | | இன்பமே பயக்கும் புண்ணிய மெல்லா மிழிதரு பாவங்க ளெல்லாம் | | | துன்பமே பயக்கும் புண்ணிய பாவந் தொக்கதம் பயன்றரா தொழியா |
|