பக்கம் எண் :

366தணிகைப் புராணம்

 கொன்படு வினைக ளொழியிரு வினையுங் குலாவுறு புண்ணிய பாவ
 வன்புறு பயனை யப்பயன் போல வழங்குறா தொழிவகை யிலையே.

(இ - ள்.) புண்ணியச் செயல்கள் யாவும் இன்பினையே தரும் இழிக்கத்தக்க பாவங்கள் யாவுந் துன்பினையே தருவனவாம். புண்ணிய பாவமென்னு மிருசெயலும் தமக்கெனத் தொகை செய்யப்பட்ட பயனாய இன்பதுன்பினைத் தாராதொழியாவாம். (நீரடித்தல் அழுக்குத்திரட்டல் முதலிய) வீணாகிய வெறுவினைகள், ஒழிக்கின்ற சிவ நல்வினை தீவினைகளும், தம் பயனாகப் பொருந்தும் புண்ணிய பாவங்களின் வலியபயனாகிய இன்பதுன்பினை அப்பசுக்களின் இருவினைப் பயன்கள்போலத் தராமனீங்கும் வகையும் இல்லையாம்.

(வி - ம்.) கொன்படுவினை யொழிவினை யென்பதற்கு - அச்சத்தைத் தருகின்ற நல்வினை தீவினையை யொழிக்கின்ற சிவநல்வினை யென்பாருமுளர்.

(116)

 ஈண்டுநாற் பிறப்பி னெழுவகைத் தோற்றத்
           தெண்பத்து நான்கெனு மிலக்கம்
 மாண்டபல் பவத்திற் பன்முறை வினையான்
           மறிதரு முயிர்களை யெடுப்ப
 ஆண்டரு ளமல னனாதியி லுலக
           மாக்குழி யருந்தலந் தீர்த்தம்
 காண்டகு மூர்த்தி யென்னமூன் றுருவாய்க்
           கண்ணக னுலகெலாங் கதித்து.

(இ - ள்.) இப்புவனத்தின்கண் (முட்டையிற் பிறப்பனவும், கருப்பையிற் றோன்றுவனவும், வேர்வைநீரிற் பிறப்பனவும், வித்துவேர்கிழங்கு முதலியவைகளைப் பிளந்து தோன்றுவனவுமாகிய) நால்வகைப் பிறப்பினால் மனிதர் தேவர் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன தாவரமென்னும் எழுவகை வடிவ வேறுபாட்டினையுடைய எண்பத்து நான்கிலக்கமென்னுந் தொகை மிகுந்த பிறவிகளிலே பலமுறை இருவினைக்கீடாகக் (கொள்ளிவட்டமும் காற்றாடியும்போல) மேலுங்கீழுஞ்சுழன்று போக்கு வரவு புரிய முயிர்களை அநாதிமல முத்தராகிய அருள்வடிவான சிவபெருமான் அச்சுழற்சியினின்று (கைம்மாறில்லாத பெருங்கருணைத் திறமாகிய, கையினாலெடுத்தற்பொருட்டு அநாதிக்காலத்தே இவ்வுலகைப் படைக்குஞான்று அருமையாகிய தலம், தீர்த்தம், யாவரும் காணத்தக்க மூர்த்தி என்று மூன்று வடிவங்களாகத் தனது சத்தியினாலே வெளி வந்து தோன்றி.

(வி - ம்.) மறிதரும் - சுழலும். ஆக்குழி - படைக்கும் பொழுது. கண் - இடம்.

(117)

 அறிதரா வகையிற் புண்ணிய முற்ற வடுத்தறி தரப்பணித் ததற்பின்
 செறிதரு மகத்துச் சரியைமுன் னான்குந் திகழ்தர மென்மெலச் செலுத்தி