பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்367

 நெறிதரு முண்மைச் சரியைமுன் மூன்று நிரப்பியே தன்வலி தேய்ந்து
 பறிமல பாகம் பயிற்றுபு சத்தி பதித்திரு வினைச்சம மாக்கி.

(இ - ள்.) இருவினை காரணமாகப் போக்கு வரவு செய்யு மான் மாக்கள் அறியாத வகையினாலே சிவபுண்ணியங்களைச் சேர்ப்பித்து அதன் பின்னர் அச்சிவபுண்ணியத்தை யறிந்து இயற்றும் வண்ணம் செய்வித்து அதன் பின்னர் அப்புண்ணியத்தான் வருதற்குரிய (அகச்சமயமாறினுக்கும் பொதுவாகிய) உபாயச்சரியை கிரியை யோகம் ஞான மென்னும் நாற்பாதங்களையுந் தெரிந்தொழுகுமாறு மெல்ல மெல்ல வியக்குவித்து, வீட்டினை நேரேயளிக்கின்ற (சித்தாந்த சைவத்துட்கூறிய) (சிறப்பாகிய) உண்மைச் சரியை, கிரியை, யோகம் முறையே நிறைவித்து (அச்சிறப்பியல்பு பொருந்திய தவத்தானே) தன்வலிகெட்டு நீங்குவதாகிய ஆணவமல பரிபாகம் வரச்செய்து, அதனாலுளதாகத் தக்க சத்திநி பாதத்தை விளக்கி (அவ்விளக்கத்தினாலே) இருவினையுஞ் சமமாகக் காணுமாறு செய்து.

அபுத்தி பூர்வபுண்ணிய முதிர்தலாற் புத்தி பூர்வபுண்ணியஞ் செய்யத் தன்வலி தேய்ந்து பறிந்த மலமெனக் கூட்டுக. சிவபுண்ணியம் பத்தனுள் இச்செய்யுளில் உபாயச்சரியை முதலொன்பதனையுங் கூறி அடுத்த செய்யுளில் உண்மை ஞானத்தைத் தசகாரியமாக வுணர்த்துவா னெடுத்துக்கொண்டார்.

(வி - ம்.) தன் - என்றது ஆணவத்தை.

(118)

 பாசமும் பசுவுங் கீழுற மேலாம் பசுபதி நீருறு கூர்ப்புத்
 தேசுறத் திரண்டா லெனவருட் குருவாய்த் திருவுரு வெடுத்தெழுந்தருளி
 மாசறு மனுக்கள் பதங்களக் கரங்கள் வதிபுவ னங்கடத் தவங்கள்
 ஆசறு கலைகளென்னுமோ ராறு மரிறபத் தூய்மைசெய் தருளி.

(இ - ள்.) பாசஞானமும் பசுஞானமும் (வியாப்பியமாய்க்) கீழாகப்பொருந்த (அவற்றின்) மேம்பட்டு வியாபகமாய் விளங்குகின்ற ஆன்மநாயகர், நீரின்கட்டோன்றாது பொருந்திய உவர்ப்பென்னுஞ் சுவை (வியஞ்சகமுள்வழி) பிரகாசம் பொருந்தத் திரண்டு தோன்றினாற்போல, அருளே திருமேனியாகப் பரமாசாரியராகத் திருவுருக்கொண்டெழுந்தருளி (ஆணவமலத்தின்) அழுக்கையறுத்தற்குப் பொருந்திய மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, தங்குதற்கிடனாகிய புவனாத்துவா, குற்றமற்ற கலாத்துவா வென்னும், ஆறத்துவாக்களையும், (அவற்றுள் அவ்வான்மாக்கள் நுகரக்கடவனவாய்க் கிடந்த) வினைக்குற்ற மனைத்தும் நீங்கும்படி சுத்தி செய்தலாகிய நிருவாண தீக்கையினைச் செய்து.

(119)

 கூட்டமே பொதுவே தன்னியல் பென்னக்
           குறித்திடு முத்திற வுணர்வால்
 நாட்டுமுப் பொருளு மொன்பது தரமா
           நாடிடப் படுமவை யெல்லாம்
 காட்டுபு காட்டுந் தானுங்கா ணறிவுங்
           கதிர்வழி யெனக்கலப் பாகும்