பக்கம் எண் :

368தணிகைப் புராணம்

 ஈட்டரும் பயனுந் தெரித்ததி னழுத்து
           மிவற்றையுங் கிளக்குதுங் கேட்டி.

(இ - ள்.) (அத்தகைய நிருவாண தீக்கையுற்ற ஆன்மாக்கள்) தொகையாகப் பெயர்சாதி முதலியவற்றைப் பிரித்தறியாது பொதுவகையா னுணரும் நிருவிகற்பக்காட்சியும், பொதுவியல்பா னங்ஙன முணர்ந்தவற்றைச் சிறப்புவகையா னறிதற்கட் டுணிவு பிறவாது இதுவோ அதுவோவென் றையுற்றுணரும் இரட்டுறு காட்சியும், சிறப்பு வகையான் பெயர் சாதி முதலியவைந்தனையு முணருந் தெளிவுக் காட்சியுமென்று கருதப்படுகின்ற, ஞானசிற்சத்தியின் றொழிற்பாட்டினாலே (சித்தாந்த நூலுணர்வால்) நிலைபெறும்படி செய்யும் முப்பொருள்களையும் தனித்தனி ஒவ்வொன்றும் மும்முறையாக ஒன்பதுதரமாராய்ந்துணரப்படும். அம்முத்திற உணர்வின் வகைகளை (உணர்ந்து உணர்த்தும் சிவஞானமும்) காட்டவுணரும் ஆன்மஞானமும் கதிரொளியுங் கண்ணொளியும் போலக் கலந்த அத்துவிதமாயிருக்கும் (பல பிறவிகளினும் தேடுதற்கரிய பெரும் பயனாகிய சிவப்பேற்றினையுமுணர்த்தி அதனிடத்தழுத்தி யனுபவிப்பதாகிய சிவபோகமென்னும் இப்பத்துக் காரியங்களையும் தெளிவுறச் செவியறிவுறுப்பாங் கேட்பாயாக.

(வி - ம்.) கூட்டவுணர்வு, பொதுவுணர்வு, சிறப்புணர்வு ஆகிய மூன்றும் முப்பொருளுக்கும் உளவாகலின் ஒன்பதாயின. கூட்டவுணர்வு - பொது வகையானுணரும் நிருவிகற்பக்காட்சி, பொதுவுணர்வு - பொதுவகையா னறியப்பட்டுச் சிறப்புவகையா னறியப்படாத ஐயக்காட்சி. தன்னியல்பு - சிறப்பியலானுணரு மறிவென்க. நிருவிகற்பக்காண்டல், இரட்டுறக் காண்டல், சிறப்புறக் காண்டலென்னும் மூவகையுணர்வான் முப்பொருளும் ஒன்பது வகைப்படுமென்க, காட்டுகின்றதானும், அதனைக் காண்கின்ற அறிவும் கதிரொளியும் கண்ணொளியும் அத்துவிதமாகக் கலப்பாகின்ற ஈட்டுதற்கரிய பேரின்பப்பயனையுந்தெரித்து, அப்பயனில் அழுத்துவானென்க. அழுத்தும் என்னும் பயனிலைக்கு எழுவாய், அமலனென 117-ஆம் பாட்டிலுள்ளது காண்க.

(120)

 மண்முத லாகச் சிவமுடி வாக
           மலிதரு தத்துவ மெல்லாம்
 நண்ணிய தொழிலைத் தனித்தனி காண்டல்
           நவைதரு மதனுரு வாகும்
 திண்ணிய வவைதாஞ் சடமெனக் காண்ட
           றெரிசன மிடையிவை நீங்கும்
 உண்மையைக் காண்டல் சுத்தியா மூன்று
           முற்றன பாசத்தின் மாட்டு.

(இ - ள்.) பிருதுவி தத்துவ முதலாகச் சிவதத்துவ மிறுதியாகத்தொக்க முப்பத்தாறு தத்துவங்களும் (ஆன்மாவாகிய தன்னொடு மியைந்த விடத்துப் பொருந்திய செயல்களை ஒவ்வொரு தத்துவமும் இதனை இதனைச் செய்கிறதென வேறு வேறாகவைத் தான்ம சிற்சத்தியுணர்தல் குற்றத்தைச் செய்யுந் தத்துவரூபமாகும். வலியமைந்த அத்