| தத்துவக் கூட்டங்கள் (இயக்குவானையின்றி யியங்குதலின்மையால்) அறிவில் பொருளென்றான்ம சிற்சத்தி யுணர்தல் தத்துவ தரிசனமாகும். இத்தத்துவக் கூட்டங்கள் (ஒரு பொருள்போற் காணப்பட்டு நின்று) இடையில் இறைவனருளால் நீங்குமென்னு முண்மையை (ஆன்ம சிற்சத்தி யுணர்தல்) தத்துவ சுத்தியாம் - பாசமாகிய பொருளின்கண்ணே (இங்குக்கூறிய) உருவந்தரிசனமென்னும் மூன்றும் பொருந்தியனவாம். (121) | | இன்னணம் பாச மகறலு முறவும் | | | இகலுறு பகையுநா டாது | | | மன்னிய தானே முதலென நிற்றன் | | | மாசுயிர்க் குருவிது காறும் | | | அன்னியத் தழுங்கு நினக்குயி ரருளென் | | | றகற்றவவ் வருளினான் முதலென் | | | றுன்னுதல் காட்சி யுதுகொடு செயநேர்ந் | | | தொழிந்தரு ளாய்விடல் சுத்தி. |
(இ - ள்.) இங்ஙனம் தத்துவ சுத்தியாதலும், உடனின்றுணர்த்துஞ் சிவமாகிய வுறவினையும் (தன்னாற்றலானே பொல்லாங்கென்பன வெல்லாமியற்றிய) மாறுபாடுற்ற மலமாகிய பகையினையும், அறியமாட்டது (கேவல சகலங்களிற்) பொருந்திய ஆன்மாவே (தத்துவக் கூட்டங்களினின்று நீங்கியவளவில்) தன்னை முதற்பொருளென்றறிந்து நிற்றல் (மலக்) குற்றத்தையுடைய ஆன்மாவுக்கு வடிவாகும். இச்சுத்தாவத்தையைத் தலைப்படுமளவும், நின்னியல்பின் வேறுபட்ட பாசக்கூட்டத்தினிடையே அதுவதுவா யழுந்தியிருந்த நினக்கு உயிராவது அருளாகுமென்று (பரமாசாரியர் திருவாய்மலர்ந்தருளி நான்முதலென்றலை) நீக்க (அங்ஙனந் தெரித்துக்காட்டிய) அருளினாலே (அதனோடு) கலந்து நானுஞ் சிவசமமேயென்று முனைத்து நிற்றல் ஆன்மதரிசனமாகும். அந்த அருளைக்கொண்டு எத்தொழிலையுஞ் செய்யப்பொருந்திய பின் (பின்னரு மவ்வருள் கருணையினா னிழித்துணர்த்த) அம்முனைப்பைவிட்டுத் துயக்குற்று அவ்வருளிலே யழுந்திவிடுதல் ஆன்மசுத்தியாம். (வி - ம்.) அருளுஞ் சிவமு மபேதமாகலான் அருளைச் சிவமாகக்கொள்க. உது - அது. (122) | | மேதகு மருளான் முதலென நினைத்தல் | | | விழுத்தகு மருளினா லதுசெய் | | | தீதறு தொழில்கள் செய்வலென் றெண்ணுஞ் | | | செயலற றிகழருண் மயமாய்ப் | | | போதமுற் றொடுக்க லென்னமுன் கிளந்து | | | போந்தவற் றடங்கிய மூன்றும் | | | ஆதித னுருவந் தெரிசனம் யோகம் | | | ஆமினிப் போகமு மருள்வாம். |
|