| (இ - ள்.) மேன்னை பொருந்திய அருளினானே (ஆன்மா) தன்னைச்சிவமாகக் கருதுகின்ற காலத்து (அந்நிலை) மாறும் வண்ணம் உணரச், சிறந்த அவ்வருளினாலே அவ்வருள் செய்யுங் குற்றமற்ற செயல்களையானே செய்வலென்றுன்னுஞ் செயலற்று நிற்குமிடத்துணர நிற்றலும், விளங்குகின்ற அவ்வருளின் மயமேயாகி (தற்போத முற்றிலும்) சிவபோதமாய் அடங்கி அந்நிலையிலுணர நிற்பதும் என முன்னே கூறிப்போந்த ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி என்பவற்றோடு உடனிகழ்வாய் விளங்கிய மூவகையுணர்வும் சிவரூபமும், சிவதரிசனமும், சிவயோகமுமாகும். இது கிடக்க இனிச் சிவபோக வியல்பினையு முனக்குபதேசிப்பாம். (வி - ம்.) அருளானினைத்தலற வுணர நிற்பதும், தொழில்கள் செய்வலென்றெண்ணுஞ் செயலற்று நிற்குமிடத்துணர நிற்றலும், அருண்மயமாய்ப் போதமுற்றொடுக்குமிடத்துணர நிற்பதும், எனக்கூறிப் போந்த ஆன்மரூப முதலியவற்றுடன் நிகழ்கின்றன ஆதியுருவ முதலியனவாகு முடிக்க. அறவென்பதனை அருளான் முதலெனநினைத்த லென்பதனோடுங் கூட்டுக. (123) | | ஒன்றுறு மதனா லொருபொரு ளாகா | | | திரண்டினால் வேறுமா காது | | | தொன்றுறு நிலையே நிலையதாய்ச் சேர்ந்து | | | துன்னலுந் துன்னுறா மையுமற் | | | றன்றுமா ணவத்தி னழுந்தியாங் கறிவா | | | யறிவினு ளழுந்தியங் கறிவு | | | பொன்றியும் பொன்றா தவசமா யின்பப் | | | புணரிவாய் மடுப்பது போகம். |
(இ - ள்.) அவ்வுயிர் இறைவனோடொன்றாய்க் கலப்புற்றதனாலே (நீரும் நீருங்கலந்தாற்போல) பொருளொன்றாகவு மாட்டாது, (பொருட்டன்மையால்) வேறுவே றிலக்கணமுற்றிருத்தலான் (இருளுமொளியும்போல்) வேறாகவுமாட்டாது, பண்டைப்பரிசே நிலைமையாகப் பொருந்தியதனான் வந்தொன்றோ டொன்றியைதலும் இயையாமையுமின்றி, அநாதி கேவலத்தும் ஆணவமலத்தின் அம்மலவடிவாயியைந்தாற்போல (இம்முத்திக் காலத்தும்) அறிவே வடிவாய் அச்சிவஞானத்துள்ளே அழுந்தி (அங்ஙன மழுந்துகையினாலே) ஆன்மபோதமாகிய சுட்டுணர்வு நீங்கப்பெற்றும், (பதிஞானத்தானே பதியை யுணரும் உண்மையுணர்வு) நிலைபெற்றும் அவ்வுண்மை (யுணர்வும்) பதியின் வயத்ததாய் இன்பமாகிய கடலினைத் தனதனுபவமாகவே அனுபவிப்பது போகமாகும். (124) | | இந்நிலை தனக்கு மேலொரு நிலையு | | | மில்லையீ தொழிதரா தென்றும் | | | மன்னுயிர் மற்றை யொன்பதுங் கண்டு | | | மாற்றுமால் வகுத்தவீ ரைந்தும் |
|