| | துன்னிய வுண்மை ஞானமென் றுரைப்ப | | | சுத்தவைந் தவத்தையு ளடங்கும் | | | பின்னிலை நான்கி னொன்பது மடங்கும் | | | பெருநிலை போகமே யடங்கும். |
(இ - ள்.) இச்சிவபோக நிலையினுக்கு மேலே உயிர்களடையத்தக்க வேறொரு நிலையுமின்றாகும். (எக்காலத்தும் இச்சிவபோகத்தினிலை பெற்ற உயிர் இந்நிலையினின்று மொருகாலத்து நீங்காது. (தசகாரியத்துள்) சிவபோகம் ஒன்றினை யொழிய ஏனைய ஒன்பது காரியத்தையுமுணர்ந்த உயிர்கள் ஒரோவழிக் கீழுமேலுமாக மாறி யுணர்தலு முண்டு. (இங்ஙனம்) வகுத்துக் கூறிய தசகாரியத்தினை உண்மைஞானமென்று (அத்துறையிற் கைபோய) ஆசிரியன்மார் கூறுவார்கள். இவ்வீரைந்து காரியங்களும் ஓரைந்து சுத்தாவத்தை யுள்ளுமடங்கும். (அடங்குதல் யாங்ஙனமெனில்) பிற்பட்ட சுத்தசாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என்னும் நான்கு நிலைகளினும் தத்துவரூப முதலிய ஒன்பது காரியங்களும் அடங்கும். முற்பட்ட பெரு நிலையாகிய துரியா தீதத்திலே போகமொன்றுமே யடங்கும். (வி - ம்.) இந்நிலை - போகநிலை, ஒழிந்த நான்கு சுத்த சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியமென்க. இவற்றிலடங்கு முறையாமாறு, நின்மல சாக்கிரத்தில் தத்துவரூபம், சுத்தி, தத்துவதரிசனமாகிய மூன்றும், சொப்பனத்தில் ஆன்மரூபம், ஆன்மசுத்தி, சிவரூபமாகிய மூன்றும், சுழுத்தியில் ஆன்மதரிசனம், சிவதரிசனமாகிய விரண்டும், துரியத்தில், சிவயோகமு மடங்குமென்க. துரியாதீதத்தில் சிவபோக மடங்குமென்க. (125) | | இரிதரா வுடலின் வினைவரும் வருங்கா | | | லிலகிய சாக்கிரா தீதம் | | | துரியமென் றிரண்டி னின்றிடி னேறா | | | சுழுத்திசொப் பனத்திற்சாக் கிரத்தில் | | | மருவினும் வளருஞ் சகலத்தின் விரவின் | | | வளர்திறங் கிளப்பதென் மீட்டும் | | | பெருநிலை யழுந்த வவையெலா மழியும் | | | பின்புபே துறுத்துவ தின்றே. |
(இ - ள்.) இவ்வுண்மை ஞானத்தினையடைந்தோருக்கும் நீங்காதவுடம்பினளவாய் (முகந்துகொண்ட) பிராரத்தவினை அநுபவத்திற்குவரும். (அங்ஙன மநுபவத்திற்கு வருங்கால்) நிறைந்த அறிவு விளங்குகின்ற துரியாதீதம், துரியமென்னு மிருநிலைகளின் நிற்பின் (அவ்வனுபவத்தானுளவாகும்) ஆகாமியவினைகள் ஏறமாட்டாவாம். நின்மலசுழுத்தி, சொப்பனம் சாக்கிர மென்னும் நிலைகளைப் பொருந்தினும் அவ்வாகாமியவினை யேறாநிற்கும். சகலத்தின்கண் ணிகழும் சாக்கிரம் முதலிய நிலைகளிற் பொருந்தின், அவ்வாகாமிய மேறு மென்பதனைச் சொல்லவும் வேண்டுமோ? பின்னருந் (தன்னிலையினின்றுந் தவறியதை |