பக்கம் எண் :

372தணிகைப் புராணம்

யுணர்ந்து) அந்நிலைகளினின்றும் நீங்கித் துரியாதீதத்திற்றழுவி யழுந்தப்பெறின் (அவ்வவத்தைகளினிழைத்த) அவ்வினைகளெல்லாம் (காட்டுத்தீ முன் பஞ்சின் றுய்ப்போல) அழிந்தொழியும். பின்னர் வருந்த வருத்துவதாகிய வாசனாமலமு
மில்லையாம்.

(126)

 மருண்மல மொழிய மாயையும் வினையும்
           வயங்கரு ளாகியே நிற்கும்
 இருண்மல முலகோர்க் கிரித்திட வவற்றை
           யெம்பிரா னேன்றுகொண் டருளும்
 சுருதியான் மொழியாற் சுவானுபூ திகத்தைத்
           தோற்றி்ய வமலனை யாங்கும்
 இருபகுப் பிறநின் றேத்தியின் புறுப
           வினையசன் மார்க்கமுற் றவரே.

(இ - ள்.) மயக்கந் தருவதாகிய ஆணவமலம் நீங்கவே, மாயாமலமுங் கன்மமலமும் (உண்மை ஞானிகட்கு) விளங்குகின்ற அருள்வடிவாகவே நிலைபெறும். அம்மாயை கன்மங்களை உலகத்தின் கண்ணுள்ள பெத்தான்மாக்களின் ஆணவமலத்தை நீக்கும் பொருட்டுச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டருளுவர். உபதேச கலையானும் திருவாய் மொழியானும், சிவானுபவந் தமதனுபவமாக அனுபவிக்கும் சிவயோகத்தினை விளக்கியருளிய மலமற்றவராகிய சிவகுருவினை இத்தன்மையாகிய ஞானத்தைப் பெற்றுச் சீவன்முத்தி பரமுத்தி யெய்தினார், அகம்புற மென்னாது யாண்டுஞ் சிவத்தின் விளக்கமொன்றை யுளதாகக்கொண்டு துதித்து வழிபட்டு நின்று இன்பமிக்கடைவார்கள்.

(127)

 என்றுவேற் றடக்கைச் செம்மலார் பெத்த
           முத்தியென் றிரண்டினுந் தன்மை
 ஒன்றலா தின்மை பொருடொறுங் காட்டி
           யுரைத்தரு ளறிவெலாங் கேட்டு
 நன்றுசிந் தித்துத் தெளிந்துட னிட்டை
           நண்ணிய நந்திமாத வத்தோன்
 துன்றிய மகிழ்ச்சி மீக்கோள வாண்ட
           தோன்றறாள் பழிச்சுத லுற்றான்.

(இ - ள்.) இங்ஙனமாமென்று வேற்படையைத் திருக்கரத்திலுடைய தலைமையினையுடைய குமரக்கடவுள் பெத்த நிலையின்கண்ணும் முத்திநிலையின்கண்ணும் தன்னியற்கை நிலையில்தான் அநந்நியமாயிருக்குந் தன்மையை இயங்கியற் பொருள் நிலையியற் பொருள்களின் வைத்துச் செவியறிவுறுத்தருளிய நிலைமையையெல்லாம் கேட்கலுற்றுச் சிந்தித்துத் தெளிதலுற்று மனவொருக்கங்கொண்டு பொருந்திய நந்தியென்னும் பெரிய தவத்தினையுடையான் தன்னி னீங்குதலின்றி மகிழ்ச்சி பெருக அடிமைகொண்ட தலைவன் றிருவடிகளைப் பழிச்
சலுற்றனன்.