| (வி - ம்.) கேட்டல், சிந்தித்தல் தெளிதலை வடநூலார் சிரவணம் மனனம், நிதித்தியாசனமென்பர். இவற்றைக் கேள்வி, விமரிசம் பாவனை யாமெனவுங் கூறுவர். நிட்டைகூடல் - மனவொருக்கம். தெளிந்த பின் நிட்டைக் கிடையீடின்மையால் "உடனிட்டை நண்ணிய" வென்றார். (128) வேறு | | இயல்புவே றுடைமை கற்றோ ரெண்ணிய பலவே றாகப் | | | பயில்வுறு முலக மெல்லாம் பாற்றியு மீட்டு மாயோன் | | | அயனொடுந் தோற்றிப் போற்றி யடர்மல வாற்றல் காற்றும் | | | செயறலை நின்ற வின்பத் திருவுரு முதன்மை போற்றி. |
(இ - ள்.) சிவஞானச் செல்வர்கள் இயற்கை நிலையினை வேறாக எண்ணப் பலவேறு அவயவப்பகுப்புடைத்தாகத் தங்குகின்ற உலகங்களை யெல்லாம் துடைத்தும், மீளவும் விண்டு, பிரமன் முதலிய தேவர்களை யுளவாக்கிக் காத்தும் அவர்களை நீங்காமனின்று வருத்துகின்ற ஆணவ மலத்தின் வன்மையை நீக்குஞ் செயலின்கண் தலைமைபெற்று எழுந்தருளிய இன்பமே திருவுருவாகக்கொண்ட முதன்மை அடியேங்களால் வணங்கப்படுவதாகும். (வி - ம்.) எண்ணிய - எண்ண; வினையெச்சம். இயல்பு வேறுடைமை - அறிஞரால் அறியப்பட்ட சொரூபநிலை. தோற்றல் - படைத்தல். போற்றி - காத்து. மலவாற்றல் காற்றல் செயல் - அருள் பண்ணுந் தொழில்; அஃது அநுக்கிரகஞ் செய்தல். போற்றி இகரவீற்று வியங்கோள். இயல்பு வேறுடைமை எண்ணிய, என்றதனால் சொரூப நிலையாகிய சிறப்பிலக்கணமும், உலகமெல்லாம் பாற்றி, தோற்றி, போற்றி என்றதனால் தடத்த விலக்கணமாகிய பொது விலக்கணமுங் கூறியது காண்க. (129) | | ஒண்குண மில்லா நாயே னுறுமட மன்றி யில்லாத் | | | திண்குண மலத்திற் பண்டு சிவணுற வாளா நின்ற | | | எண்குணத் தலைவன் மற்றாங் கிரும்பரு வத்தை யேய்த்து | | | வண்கலை யாதி தந்த வரம்பில்வள் ளன்மை போற்றி. |
(இ - ள்.) ஒள்ளிய (அமைதிக்குண முதலிய) குணங்களில்லாத நாயினுங் கடைப்பட்டவனாகிய அடியேன் மிக்க அறியாமையை யன்றிவேறு (அறிவு முதலிய) நற்குணங்கள் சிறிதுமின்றிச் செறிந்த திண்ணிய குணமாகிய ஆணவமலத்தோடு கேவல நிலையில் அனாதியே பொருந்தாநிற்ப அஞ்ஞான்றும் இவ்வாணவ முதலிய வொரு தொடக்கு மின்றி வாளாநிற்றலைச் செய்த எண்குணங்களையுடைய தலைவன் அக்கேவல நிலையின்கண்ணே பரிபாகம்வரும் வண்ணஞ் செய்து அறிவு முதலிய விளங்குதற்குக் காரணமாகிய கலாதத்துவ முதலிய தத்துவக் கூட்டங்களைக் கொடுத்தருளிய அளவிட வொண்ணாத வள்ளற்றன்மை வணங்கப்படுவதாம். (வி - ம்.) உயிர்கள் அறிவிச்சை செயலின்றி ஆணவமலத்திற் கட்டுண்ட அநாதிக் காலத்தே இறைவன் ஒரு தொடக்குமின்றி நின்று |