| உயிர்களுக்குப் பாகத்தை வருவித்து அறிவிச்சை செயல்கள் விளங்குதற்குக் கலை முதலிய தத்துவக் கூட்டங்களை இயைவிப்பான் என்பது தோன்ற "இரும் பருவத்தை யேய்த்து வண்கலை யாதிதந்த வள்ளன்மை" என்றார். (130) | | இருண்மல மொன்றே பற்று மிருவினை யுடையேற் கந்தோ | | | மருண்மலி மாயை கன்மந் திரோதான கரியை மல்கும் | | | பொருண்மலி தருமா மாயைப் புகர்மல நான்குந் தந்தும் | | | அருண்மலி யருளிற் றீரா வற்புதத் தொழின்மை போற்றி. |
(இ - ள்.) இருள்போல மறைக்கின்ற ஆணவமல மொன்றனையே பற்றியதனால் விருப்பு வெறுப்பென்னு மூலகன்ம மிரண்டையுமுடைய எளியேனுக்கு ஐயகோ! மயக்கத்தைச் செய்கின்ற மாயாமலத்தினையும் கன்ம மலங்களோடு மறைக்குந் தொழிலைச் செய்யும் திரோதான சத்தியையும் தம்மைக்காட்டினும் பருப்பொருட்டாகக் காரியப்படும் மிகுந்த தாத்துவிகமாகிய பொருளைத் தருகின்ற மாமாயை யென்னும் குற்றம் பொருந்திய நான்கு மலங்களையுந் தந்து அருணிறைந்த அருட்டன்மையில் இறையு நீங்காத வியப்பினைத்தருகின்ற ஐந்தொழிற்றன்மை வணங்கப்படுவது. (வி - ம்.) திரோதானகரியை - ஐ : சாரியை. இருவினை - விருப்பு வெறுப்பு. மாமாயை - மாயேயம். இதனை உடலென்பர். இதனை "மாயாதநு விளக்காய்" என்னும் சிவஞான போதத்தா னுணர்க. தொழின்மை - தொழிலின்றன்மை. (131) | | நெருப்பிடை யழற்றி வாளி னிமிருடல் பிளந்து கண்வாய் | | | குருப்பொலி சோரி தூங்கக் குடைந்தடு நரகத் திட்டும் | | | கருப்பொலி புவியி னுய்த்துங் காமரு துறக்கத் தேய்த்தும் | | | விருப்பொடு வெறுப்பு மின்றி மிளிரவி காரம் போற்றி. |
(இ - ள்.) உயிர்களாகிய எம்மைவினையினுக்கேற்ற வண்ணம் அழலின்கண்ணே வாட்டியும், வாட்படையானீண்ட உடலினைப் பிளந்தும் கண்ணும் வாயும் செந்நீரோடக் குடைந்தும் இங்ஙனம் வருத்தலைச் செய்யும் வெறுப்பைத் தருகின்ற நகரத்தின்கட் செலுத்தியும், விருப்பம் வருவதற்கேதுவாகிய விண்ணுலகின்கட் செலுத்தியும், விருப்பும் வெறுப்புமின்றி விளங்குகின்ற தலைவரது விகாரமின்றி விளங்குந் தன்மை வணங்கத் தக்கது. (132) | | பூதமோ பூதத் தான பொறையுடல் பொறிக டாமோ | | | மேதகு கரணந் தானோ விரிதரு மாயை கொல்லோ | | | யாதுதா னுணர்வ தென்றென் றினைதரா வண்ண நீதாழ் | | | போதம்வே றென்று வந்த பொங்கொளிப் போதம் போற்றி. |
(இ - ள்.) மண்முதலாகிய ஐம்பெரும் பூதங்களோ, அப்பூதங்களாலாகிய சுமையையுடைய உடலின்கண்ணே தங்கும் ஐம்பொறிகளோ? அன்றி அவைகளின் மேன்மையுற்று விளங்குகின்ற அகக்கருவியாகிய |