| (இ - ள்.) இருவினைகளும் மீட்டுமுளவாமாறு (பிராரத்தவினை) வருத்த வருந்துகின்ற. அடியேனது இன்னலை நீக்கி, மும்மலங்களானு முளவாகின்ற வாசனாமலம் நீங்கும் வகையிலே மேலுந் தன்னை யறியச் செய்து மலமும் வாசனையுமாகிய எல்லாவற்றினையும் நீக்கி இடையறாப் பேரன்பால் அடியவர்கள் வழுத்தி அருச்சித்தலால் இன்னிசை செய்து வண்டுகள் மொய்க்கின்ற தேனொழுகும் மலர்கள் கமழும் தாமரை மலரென்று உபசரித்துக்கூறும் திருவடிகளை இடையறாது நினைத்துப் பொருந்தும் பெரியதொரு இன்பவாழ்வை அடியேனுக்குத் தந்தருளிய தூயவுடம்பாகிய சிவக்கொழுந்து வணங்கத்தக்கது. (வி - ம்.) அனைத்துகள் ; விகாரம், அஃதனைத்தாலாகிய துகள் என விரியும். துகள் - மலம். (136) | | கேவல சகல முத்திச் சகலமுங் கிளர வுய்த்தக் | | | கேவல சகல நீக்கக் கெழுமுறு சுத்தந் தன்னில் | | | கேவல மாயி னேனைக் கேவலந் தணித்து மேலாம் | | | கேவல முறுத்த நாடுங் கேவலப் பொருண்மை போற்றி. |
(இ - ள்.) கேவல சகலம், சகல சகலம், முத்திச் சகலம் என்னும் மூவகைச் சகலாவத்தையினையும் பொருந்துமாறு செலுத்தி, நுகர்வனவற்றை நுகர்வித்து அம்மூவகைச் சகலாவத்தையும் நீங்குமாறு சிவத்தோடுங் கூடும்படி பொருந்துஞ் சுத்தாவத்தையிலே கருவிகளினீங்கி வியாபகத்தைத் தலைப்பட்டுத் தனிமையின் முனைத்த அடியேனை (தன்னருளுபகாரத்தை யுணர்த்தி) அத்தனிமையினின்றுந் (முளைக்கும் முனைப்பைத்) துவளுமாறு செய்து உயர்வாகிய சிவவியாபகத்தைப் பெற்றழுந்தி (அவ்வியாபக உணர்வையன்றி பிறிதியாதனையு நாடாத்) தனிமையாகிய சுத்த கேவலத்தைப் பொருந்துமாறு ஆராயும் ஒப்புயர்வற்ற அநாதி முத்தத் தன்மையாய பொருட்டன்மை வணங்கத் தக்கது. (137) | | ஆணவத் தன்றே பட்டா யடுத்துறு மாயை பெட்டாய் | | | பூணுறு வினைக்கோட் பட்டாய் போக்கொடு வரவும் பட்டாய் | | | ஏணுற வறிந்தாய் நீயே போலுமென் றிழித்து மேலாம் | | | மாணுருத் தோற்றி யென்னைக் காட்டிய வடிவம் போற்றி. |
(இ - ள்.) (சுத்தஞ்சுகம் நித்தியமாகிய தானே) உயர்வாகிய குரு வடிவங்கொண்டு அநாதிக்கண்ணே ஆணவமலத்தோடுங் கலந்தாய், அம்மட்டோ, பின்ஆதியாய மாயாமலத்தினையும் விரும்பிப்புணர்ந்தாய், (அம்மாயாமலங் காரணமாக) பொருந்தும் வினைகளிலுள்ளும் அகப்பட்டனை, அவ்வினையின் காரணமாகப் பிறப்பிறப்பினையுமடைந்துழன்றாய், இக்கட்டினையெல்லா முற்றுழன்ற நீதானே வலிபொருந்தப் பெரிதும் உணருமறிவுடைப் பொருளானாய் போலும் என்றிகழ்ந்து, அடியேனை உள்ளவாறுணரும் வண்ணம் அக்கட்டுக்களையெல்லாம் நீக்கி உண்மை நிலையை உணர்த்தியருளிய அந்தச் சிவகுரு வடிவம் வணங்கத் தக்கது. (138) | | ஒன்றுகே வலத்தி னையைந் துறழைந்து சகலத் தொன்று | | | முன்றவிர் சகலத் தைந்து முதிரொளிச் சுத்தந் தன்னில் |
|