வியாப்பியமாக அடங்கலுமாகிய மூவகைப் பாழின் மேலே அத்துவித சம்பந்தமாகிய முழுப் பாழாயுள்ள மிக்க பேரின்பம் வணங்கத் தக்கது. (வி - ம்.) ஞாதுரு, ஞானம், ஞேயம் - காண்பான், காட்சி, காட்சிப் பொருள், முப்பாழ் - இன்பினைக் கடந்து நிற்றல். (141) | அருள்பொழி விழியீ ராறு மலர்தரு முகமோ ராறும் | | திருவரு ளினிது தந்த செங்கனி வாயுங் கையும் | | மருமலர்ப் பதமும் வாய்ந்த வள்ளற னுருவ மெல்லாம் | | பெருகிய சுகத்துக் கப்பாற் பிறங்குமப் பிறக்கம் போற்றி. |
(இ - ள்.) கைம்மாறு கருதாது, அருளினைக் கொட்டுகின்ற திருக்கண்கள் பன்னிரண்டும் (பிறவி வெப்பம் நீங்கும்வண்ணம் தண்ணளி புரிந்து) மலரும் திருமுகங்கள் ஓராறும், சிவஞானத் தெளிவுப தேசத்தை அடியேனுக்கினிமையாகத் தந்தருளிய சிவந்த கனிபோன்ற திருவாயும், அவ்வுபதேசப் பொருளைச் சின்முத்திரையா லுணர்த்துந் திருக்கரமும், (அடியேன் தலைமேற் சூட்டுதலினால் உணர்த்தும்) வாசனை தங்கிய மலர்போன்ற திருவடிகளும் வாய்க்கப்பெற்ற திருவுரு வினையுடைய பெருவள்ளலாகிய பரமாசிரியன் வடிவமனைத்தும், மிக்க சிவபோகத்தினுக்கு மேலும் மேலாக விளங்குகின்ற அவ்விளக்கம் போற்றப்படுவது. (142) | என்றிருந் துதிகள் சால வியம்பியாட் டயர்ந்து முன்னே | | நின்றமெய்க் குரிசி றன்னை நின்மலக் குமர னோக்கி | | இன்றுநின் கருத்து முற்றிற் றினிக்கயி லாயத் தெந்தை | | மன்றலங் கழற்றாள் போற்றி வதியென வருண்மேல் கொண்டு. |
(இ - ள்.) என்றிங்ஙனம் அரும்பெருந் தோத்திரங்களை மிகவுஞ் சொல்லித் துதித்து (இன்பமேலீட்டினாலே வணங்கி )த் தண்டமிட்டுக் கூத்தாடித் தமது திருமுன்னர் நின்ற உண்மையறிவு விளங்கிய திருநந்தி தேவரை, மலமிலனாகிய குமரனென்னும் பரமாசிரியன் திருவருட் பார்வைசெய்து. பன்னாட்டவமிழைத்த நின்னுள்ளக் கருத்து இற்றை ஞான்று நிறைவேறிற்று. இனித் திருக்கைலாயத்திலே எம்பரமாசிரியனாகிய சிவனாருடைய மணங்கமழும் மலர்போலும் வீரக்கழலணிந்த திருவடிகளை வழிபட்டு (ஆண்டே) அக்குரவன் பணியினிற்பாயென்று கட்டளையிட்டருள, திருநந்திதேவர், அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு. (143) | பன்முறை வணங்கி மீட்டும் பஃறுதி நிரப்பி மெய்யில் | | புன்மயிர் பொடிப்பக் கண்கள் பொழிமழைத் தாரை வாக்கச் | | சின்மயன் றாளிற் சூழ்ந்த சிந்தையைப் புய்க்க லாற்றான் | | மென்மெலப் பிந்திப் பிந்தி விண்ணெறி முன்னு கின்றான். |
(இ - ள்.) பன்முறையுங் கீழ்வீழ்ந்து வணங்கி பலப்பல தோத்திரங்களைச் செய்து திருமேனியின்கண் மயிர் பொடிப்ப கண்கள் பொழியும் நீர்த்தாரையை ஒழுக்க, அறிவே திருவுருவான கந்தபரமாசாரியன் |