(இ - ள்.) வரிசையாகச் செய்து வைத்ததென்று சொல்லும்படி யரும்பி பலகாற் சாய முதலியவற்றிற் றோய்த்துப் பழக்கியதென்று கூறும்படி நிறம் பரவிய மெல்லிய இதழ்கள் விரிந்த கோங்குமரங்கள் நிற்றல், அப்பாலை நிலப் பெண்களின் இளமைபொருந்திய தனங்களைப் போல அரும்புவர நினைத்து வெயிற்க(ணின்று) பெரிய தவத்தைச் செய்தலை யொப்பனவாகும். (வி - ம்.) இணைய - ஒப்ப; வீழ்வன - ஒப்பன; இவை இணைவீழ் என்னும் உவம உருபடியாகப் பிறந்த வினையெச்சங்கள். இனி ஓவியராற் சித்தரிக்கப்பட்ட மலரானவை நிறங்குன்றாமல் அலர்தல் குவிதல் செய்யாது என்று மொருபெற்றித்தாயிருக்குமாதலின் செய்தாற் போல வெனப் பொருள்படும்படி பயிற்றியதென நிறம் பரந்த கோங்கமென்றாரெனினுமமையும்; குயிற்றுதல் வரிசையாகச் செய்துரைத்தல்; இது இல்புலப் பயன் றற்குறிப் பென்னுமணி. (53) | | குரவலர்ப் பாவைபெற் றெடுப்ப கோழரை | | | மரவம்வெள் ளணியினால் வயக்க மாணுவ | | | விரவலர் தூற்றுவ வேரிப் பாடலம் | | | பரவிசை பகர்வன பறவைக் கோகிலம். |
(இ - ள்.) குராமரமானது பூவாகிய பாவையை யீன்றெடுப்பன; கொழுவிய அரையுடைய குங்கும மரங்கள் வெள்ளணியினாலே விளங்குதலை யொப்பனவாகிப் பூத்தன; வாசனை பொருந்திய பாதிரிமரங்கள் பொருந்திய அலரைத் தூற்றுவனவாம்; குயிற்பறவைகள் யாண்டுஞ்செல்லும்படியான வாழ்த்திசையைப் பாடுவனவாம். (வி - ம்.) தலைவி புதல்வற் பயந்தமையை யறிந்த செவிலி முதலாயினார் தலைவன் வரும்பொருட்டுச் சேடியர்க்கு வெள்ளணி யணிந்து சேர்க்குய்ப்ப அதனைக் கண்ணுற்ற பரத்தையர் அவர் தூற்றலும் பாணர் முதலியோர் தலைவன் இசையைப் புகழ்தலுமாகிய செய்கைகள் இக் கவியினமைந்திருத்தல் காண்க. குராப் பூ பாவை போன்று மலர்தலினால் 'குரவலர்ப் பாவைபெற் றெடுப்ப' என்றார்; இதனை, | | "நறவிரி சோலை யாடி நாண்மலர்க் குரவம் பாவை | | | நிறையப்பூத் தணிந்து வண்டுந் தேன்களு நிழன்று பாட | | | விறைவளைத் தோளி மற்றென் றோழியீ தென்று சேர்ந்து | | | பெறலரும் பாவை கொள்வாள் பெரியதோ ணீட்டினாளே." |
என்னுஞ் சிந்தாமணிப் பதுமை. 105-ம் ஆம் செய்யுளானறிக. குங்கும மரம் வெண்ணிறப் பூக்களைப் பூத்தலின் மரவம் வெள்ளணியினால் வயக்கம் மாணுவ வென்றார்; குராமரம் தலைவியராகவும், பாதிரிமரம் பரத்தையராகவும் குயில்கள் பாணர் முதலிய வாயில்களாகவுங்கொள்க. அலர் - மலர்; பழிச்சொல். இசை - இராகம், புகழ். வெள்ளணி - வெள்ளிய உடை. (54) | | விரிமுகி லிடையிடை விராய மீனமுஞ் | | | சுரிகுழன் முச்சியிற் றூக்கு நித்திலச் |
|