பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்39

 சொரிகதிர் மணிகளுந் துணையு மென்பவே
 பொரிகெழு பொகுட்டரை யிருப்பைப் பூத்தன.

(இ - ள்.) பொருக்குகள் பொருந்திய முகிழினையுடைய தூரோடு கூடிய இருப்பை மரங்கள் பூத்திருப்பன (ஆகாயத்திற்) பரந்த மேகங்களினிடையிடையே கலந்தொளிர்கின்ற உடுக்களையும் சுரிந்த கூந்தலினையுடைய பெண்களின் உச்சிக்கொண்டையிற் றொங்குகின்ற ஒளியைச் சொரிகின்ற முத்துக்களையு மொக்கும் என்று சொல்வர் அறிவுடையோர்.

(வி - ம்.) சுரிகுழல் - அன்மொழித்தொகை; தாழ்குழல் என்றாங்குக் கொள்க; முச்சி - உச்சிக்கொண்டை; கதிர்சொரி நித்திலமாகிய மணியென்க. பொகுட்டு - இருப்பை மரத்திற் றோன்றும் புடைப்பு; இனி 'என்ப' என்பதை யாசையாக்கி ஒப்பாகுமெனப் பொருள் கொள்ளினுமமையும்; "வெலற்கருங் குஞ்சர" மென்னும் முதற் குறிப்பையுடைய சிந்தாமணிச் செய்யுளினீற்றடியில் 'பிறவு மென்பவே' என வந்திருத்தல் காண்க. இது உவமையணி.

(55)

 நிகழ்தரு நால்வகை நிலனு மெல்லையாத்
 திகழ்தரு பாலையந் திணைக்கங் கேற்புற
 விகழ்தருஞ் சுரத்தவ ரெய்து போகமும்
 புகழ்தரு நானிலத் தவர்தம் போகமே.

(இ - ள்.) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என நான்கு வகையாகச் சொல்லப்படுகின்ற நிலங்களுந் (தனக்கு) இடமாக விளங்குகின்ற அழகிய பாலைத்திணைக்குப் பொருந்த யாவராலு மிகழப்பெறுகின்ற பாலைநிலமாக்களடைகின்ற போகங்களும் யாவராலும் புகழப்படுகின்ற (பாலையொழிந்த ஏனைய) நான்கு நிலத்தினுமுள்ளாருடைய போகமேயாம்.

(வி - ம்.) நிகழ்தரு - சொல்லப்பெறுகின்ற; எல்லை - இடம்; பாலைத்திணைக்கு ஏற்புறுதல் - தனக்குச் சிறிதுமிடமின்றி ஏனைய நானிலத்தினுங் கலந்திருத்தல்; பாலைநிலத்தவர் போகமாதல் - நானிலத் துள்ளாரையும் ஆறலைத்தலானும் ஆண்டுச்சென்று சூறைகொள்ளுதலானும் வந்தபொருளை நுகர்தலாம்; இவ்விரு வகையினர் செயல்களை நோக்கி 'இகழ்தரு' 'புகழ்தரு' என அடைகொடுத்தார்; அம்முந் தம்முஞ் சாரியை.

(56)

 உடங்குசெல் பவர்க்கிடை யூறொன் றின்றியே
 யடங்கரும் பெருமகிழ் வாக்கி மாதரை
 யிடங்களி லிரீஇயவர் செலவ ழுங்குமா
 தொடங்கலி னுதவியிற் சுரமொப் பில்லையே.

(இ - ள்.) விதி தம்முட் கூட்டக்களவிற் புணர்ந்து உடன்போக்கிற் கூடச் செல்கின்ற தலைவன் தலைவியர்க்கு தந்தை தன்னைமாரால் இடையூறொரு சிறிதுமில்லையாகத் தாங்கற் கருமையாகிய பெரிய மகிழ்ச்சியினை யுளவாக்கிப் பெண்களை (அயர் வுயிர்க்கும் பொருட்டு)