(இ - ள்.) (சைவருளொருசாரார் முத்தியின்கண்ணே) அப்பரமனார்போல (உயிராகிய) யானும் மங்கலகுணமாறும் உடையேனென்பர், மற்றொரு பகுதியினர் ஒப்புயர்வற்ற அப்பரமனார் இயற்றுமைந் தொழிலையும் சிவசாமியம் அடைந்த உயிராகிய யானே செய்வேனென்பர் ; (புறச்சமயத்தொரு சாரார் மயக்கத்தினீங்கித்) தெளியப்பெறின் உயிராகிய யானே எங்கும் நிறைந்த பிரமப்பொருள்; என்னையன்றி ஏனையவாகக் காண்பனவெல்லாம் முக்காலத்து மில்பொருளே யென்பர், இங்கு இவ்வாறு தத்தம் முத்தியிலக்கணங்களைக் கூறுமிவ்வெல்லாம் ஒருகுடியிற் கொண்டாரைப்போல் உயிரிலக்கண முணராமையின் ஒத்தமயக்கினரே யாவர். (151) | வரிகழற் குமர னல்க மாதவ நந்தி பெற்றாங் | | கரிறப விளக்கு நூலி னமைதராப் பொருள்க ளில்லை | | கரிசிலந் நூலி னுண்மை கேட்டிலார் கல்வி சான்றும் | | விரியுமுப் பொருளின் றன்மை தன்னமும் விளங்கக் காணார். |
(இ - ள்.) கட்டும் கழலினையுடைய கந்தபரமாசாரியன் அருள் செய்யப் பெரிய தவத்தினை மருவிய நந்திதேவர் தாம் பெற்றாற்போல (சந்தேக விபரீதக்குற்ற நீங்கத் தம் சந்தானத்து அடியவர்களுக்குபதே சித்து உலகினுக்குதவிய முதன்மையாகிய சிவஞானபோத நூலிலே அடங்காத மதப்பொருள்களில்லை. குற்றமில்லாத அத்தகைய சிவஞானபோத நூலின்கட் கூறப்படும் உண்மைப் பொருளாகிய முப்பொருள்களின் பொதுவியல்பு, சிறப்பியல்புகளை அகச்சந்தான முறையிலே நல்லாசிரியரிடத்தே கேட்கப்பெறாதவர்கள். பிறநூற் கல்விகளான் மிகுந்தும் விரிந்த முப்பொருள்களின் உண்மையை ஒரு சிறிதுந் தெளிவு பெற உணராதவரேயாவர். (152) | மந்திர கலைகண் மற்றைத் தந்திர கலைவான் வேதம் | | அந்தமி லேனை யெண்ணெண் கலைமுத றுவர வாய்ந்த | | நந்தியுந் தணிகைச் செவ்வே ணல்கிடப் பெற்றா னென்றால் | | முந்துநூன் மாத்தி ரத்தான் முப்பொரு டெளிய லாமே. |
(இ - ள்.) (கர்மகாண்டப் பொருளை விளக்குந்) தந்திரகலையையும் (ஏனைய உபாசனாகாண்டப் பொருளை விளக்கு) மந்திரகலையையும், உயர்ந்த வேதங்களையும், அளவில்லாத ஏனைய அறுபானான்கு கலைகண் முதலியவற்றையும், முற்றவாய்ந்துணர்ந்த திருநந்தி தேவரும், தணிகை மலையின் கண்ணுள்ள கந்தபரமாசாரியர் (உபதேச கலையை) உபதேசிக் கப்பெற்றே உண்மை நெறியைத் தலைப்பட்டாரென்னில் (மும்மல வசப்பட்டு முறைமறந்துழலும் நம்மனோர்கள் முதன்மையாய நூல்களை ஓதியதனான் மாத்திரம் தம்மின் வேறல்லாத எண் குணமுடைய முதல்வனியல்பையும், தம்மின் வேறாய மலத்தொடுபட்ட தம்மியல்பையும், அம்மல வியல்பையும் தேர்ந்துணர்ந்து கோடல் பொருந்துமோ? (வி - ம்.) இன்னணஞ் சகசநிட்டையென்பது முதல் இதுகாறுங் குரவன் சிறப்பும், நூற்சிறப்பும், அதுகேட்கு முறையும் எதிர்மறை முகத்தான் விளக்கிய வாற்றையறிக. (153) |