வேறு | ஞானநூ லோத லோதுவித் திடுத | | னற்ெ்பாருள் கேட்டல் கேட் பித்தல் | | ஆனவப் பொருளைச் சிந்தனை செய்த | | லைந்துஞா னத்துறு பூசை | | தானெனி லந்நூன் முப்பொரு டெளிக்குந் | | தலைப்பொரு ளாகிய தணிகை | | வானவன் மலர்த்தாள் வணங்குந ரெய்தும் | | வரத்தினை யென்னென மொழிகேன். |
(இ - ள்.) அறிவினை வளர்க்கின்ற அறிவு நூல்களைப் பயிறலும், அந்நூலினைப் பிறர்க்கறிவுறுத்தலும் (அறிவொழுக்க முடையார் பக்கலிற்றாழ்ந்து) அவர் கூறுமுண்மைப் பொருளைக் கேட்டலும், அப்பொருளைப் பிறரைக் கேட்கச்செய்தலும், அங்ஙனமாய பொருளைச் சிந்தனை செய்தலுமாகிய ஐந்தும் ஞானபூசையெனின் அந்நூலின்கண்ணுள்ள முப்பொருளினையும் தெளிவிக்கும் தலைமைப் பொருளாகிய தணிகை மலையின்கண் எழுந்தருளியிருக்கின்ற பரமாசாரியன் மலர்போன்ற பாதங்களை வணங்குகின்றவர்களடையும் மேன்மையை எத்தன்மைய தெனச் சொல்வாம். (154) | இருவினைச் சமத்தி னெய்திய முனிவீ | | ரெறிதிரை நந்திநந் தினியை | | வரவழைத் தயில்வேல் வள்ளன்மா தவத்து | | நந்தியை யாடுறப் பணித்துப் | | பொருவிலா கமத்தி லுயருப தேச | | கலையினைப் புகன்றவா புகன்றாம் | | விரவிய புகழா னகத்திய னண்மி | | மெய்யருள் பெற்றது மொழிவாம். |
(இ - ள்.) (வாளாற் போழினும் வாசனையைப் பூசினும்) இவ்விரு வினையுமொப்ப நோக்குங் குணங்களானமைந்த முற்றத்துறந்தவர்களே, திரையை வீசுகின்ற நந்தி நந்தினியென்னும் நதியினை அழைப்பித்துக்கூரிய வேற்படையினையும் வள்ளற் றன்மையையுமுடைய பரமாசிரிய பெரிய தவத்தினையுடைய நந்தியெம்பெருமானை மூழ்கும் வண்ணங் கட்டளையிட்டு ஒப்பின்றாகிய ஆகமநூலின்கட் கூறிய உயரிய உபதேச கலையினைச் செவியறிவுறுத்திய முறையினை இதுகாறுங் கூறினாம். இனி உலகெங்கினுங் கலந்த புகழினையுடையானாகிய குறுமுனிவன் பொருந்தி உண்மை யருளினைப்பெற்ற முறையினைச் சொல்வாம். (155) நந்தி உபதேசப்படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் 873. |