பக்கம் எண் :

386தணிகைப் புராணம்

 எழுந்துயர் காவியி ருங்கிரி யண்மின்
 தழுந்தர முண்டதன் றன்மையுங் கேண்மோ.

(இ - ள்.) இவ்வாறு கூறித் தம் முன்னிலையில் நின்ற அகத்திய முனிவரைச் சிவபெருமான் பார்த்தருளிப் பொருள் வளமுள்ள தமிழ் மொழியினையும் சிவஞானத்தையும் நீ விரும்பினா யாயின் மேலெழுந் துயர்ந்துள்ள காவியங்கிரியென்னும் பெயருடைய திருத்தணிகை மலையைச் சேர்வாயானால் அவைகளை அடையுந்தன்மை உண்டாகும். அதன் இயல்பையும் கூறுவேன் கேட்பாயாக (என்று சிவபெருமான் கூறியருள முற்பட்டார்.)

(வி - ம்.) நோக்கி, வேட்பின், அண்மின், உண்டு, கேண்மோ எனக்கூட்டி வினை முடிவு செய்து பொருள் கொள்க.

இறைவன், தம்மை வேண்டிய அகத்திய முனிவரை நோக்கி நீ செழுந்தமிழும் சிவஞானமும் பெறவிரும்பின் காவியிருங்கிரி சேரின் அவை பெறுந்தரம் உண்டாகும். அதன் தன்மையைக் கேள்; சொல்வேன் என்றார் என்க. காவி இருங்கிரி - குவளை மலர்கள் மிக்க பெரியமலை; ஈண்டு திருத்தணிகைமலை, தழுவும் என்னும் எதிர்காலப் பெயரெச்சம் இடை உகர்ந்தொக்கு வந்தது. தரம் - தகுதி; தன்மை. கேண்மோ என்பதில் மோ : முன்னிலை அசைச்சொல்,

(5)

 எவ்வரம் வேண்டியி றுப்பினும் வல்லே
 அவ்வர மவ்வயி னல்லது முற்றாச்
 செவ்விய தியாம்பணி யத்திகழ் வேலோன்
 தெவ்வுப தேசமுஞ் செப்பிய தாமால்.

(இ - ள்.) ஒருவன் எந்த வரத்தை வேண்டித் தங்கினாலும் விரைவாக அந்த வரம் அந்த இடத்திலல்லாமல் வேறெவ்விடத்தும் முடியா; அது, யாம் பணிந்து கேட்ப, விளங்குகின்ற வேற்படையையுடைய முருகன், கொள்ளத்தக்க பிரணவப்பொருளை உபதேசம் செய்தற்கும் இடனாக அமைந்த தகுதிப்பாடுடையது.

(வி - ம்.) எவ்வரம் - எந்தவரமும், அஃதாவது பெறற்கரிய வரம். இறுத்தல் - தங்குதல். இறு என்னும் பகுதியடியாகப் பிறந்த எதிர்கால வினையெச்சம். செவ்வியது - தகுதியுடையது, சமயமுடையது என்னும் பொருட்டு.

நான்முகன் பிரணவப் பொருளறியாதபோது, அவனை முருகப்பெருமான், அகந்தையை அடக்கக் குட்டிச் சிறை செய்தார். அதுகாலை, தேவர்கள் யாவருங் கண்டு வருந்திச் சிவபெருமானிடஞ் சென்று முறையிட்டனர். சிவபெருமான் நந்தியை விடுத்து நான்முகனைச் சிறையினின்றும் விடுதலை செய்யுமாறு கூற அவ்வாறே சிறைவீடு செய்து, பின்னர் இறைவன் "உனக்குப் பிரணவப் பொருள் தெரியுமா? சொல்" எனக்கேட்ப, முருகவேள், "ஆசிரிய மாணவ முறைப்படியிருந்து கேட்பின் கூறுவல்" என்று கூற, இறைவன் மாணவ முறையில் கீழிருந்து கேட்ப, முருகப்பெருமான் உயர்ந்த பீடத்திருந்து இறைவன் காதில் பிரணவத்தின்