| | முகேரெனத் தோய்சிவ கங்கைமுன் யாமே | | | புகாயென வைத்த லினப்பெயர் பூணும். |
(இ - ள்.) பகீரதன் என்னும் பெயருடைய பெரிய தவத்தையுடை யோனால் கீழிறங்கிவந்து அப்பகீரதன் பெயரோடு சார்ந்து பாகீரதி என்னும் பெயரால் இக்கங்கை இங்கே விளங்குவாதாயிற்று; அவ்விடத்தே "முகே" ரென்னும் ஒலிதோன்ற யாவரும் மூழ்குகின்ற சிவகங்கையானது முன்னொருகால் நாமே "செல்க" வென்று கூறி நிறுவியதால் "சிவகங்கை" யென்னும் பெயர் தாங்கி விளங்கும். (வி - ம்.) உகா - உகுத்து : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உகுத்தல் - சிந்துதல். கங்கைநீரைச் சுரந்து கீழிறங்குதலான் "உகா" என்றார். அவர் : சுட்டுப் பெயர்; பகீரதன், இக்கங்கையானது அப்பெயரால் "பாகீரதி" யென்று வழங்கும். "முகேர்" என்பது, நீரில் முழ்கும்போது உண்டாகும் ஒலியைக்காட்டும் ஒலிக்குறிப்புச் சொல். இதனை மணிமொழிப் பெருமான் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை மகளிர் நீராடலைக் குறித்துக் கூறுவதாக அமைந்த திருப்பாடலில், | | 1 "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக் | | | கையாற் குடைந்து " |
என்றதில் இவ்வொலிக் குறிப்பை உணர்த்துதலறிக. புகாய் - புகுக : முன்னிலையேவ லொருமை வினைமுற்று. வைத்தல் - நிறுவுதல்; உண்டாக்குதல். பூணும் - தாங்கும் : செய்யுமென் வினைமுற்று. (15) | | ஈங்குறு கங்கையி னெய்துப யத்தின் | | | ஆங்குறு கங்கையி னாயிர மேலாம் | | | ஈங்குவ சிப்பவெ ழுந்தப யத்தின் | | | ஆங்குவ சிப்பதொ ராயிர மேலாம். |
(இ - ள்.) இங்குள்ள கங்கையிலாடியதனால் கிடைத்த பயனைக் காட்டினும், அங்குள்ள சிவகங்கையில் ஆடியதனால் கிட்டும்பயன், ஆயிரம் பங்கு மேலானதாகும்; இக்காசி நகர்க்கண் வாழ்தலால் உண்டாம் பயனைக் காட்டினும் அத்திருத்தணிக்கண் வாழ்தலால் உண்டாம் பயன் ஆயிரம்பங்கு மேலானதாகும். (வி - ம்.) ஈங்கு : அண்மைச்சுட்டு, முதனீண்டது இங்கே சுட்டிடப் பெயராகக் காசிநகரைக் குறித்தது. பயம் - பயன்; நன்மை. ஆங்கு, அவ்வாறே திருத்தணியைச் சுட்டிநின்றது. இன்; ஐந்தனுருபு. ஏதுப்பொருட்டாக வந்தது. ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர் மிகுதிப்பொருள் தருவதோர் குறிப்பு மொழியாய் அதனால்வரும் பயனைக் குறித்து நின்றது. வசிப்ப - வாழ; இருக்க என்னும் பொருளது. காரணப் பொருட்டாக வந்த செயவெனெச்சம். (16) | | மலக்கமு றுத்திய வன்பிணி யாதி | | | கலக்கமு றுத்துக ரிசுக ளெல்லாம் |
| 1. | திருவாசகம், திருவெம்பாவை. |
|