| மழவனாகிய மன்னன் மகளுக்கிந்நோய் இருந்தது. அதனை ஆங்கெழுந்தருளிய சம்பந்தர் தேவாரம் பாடித் தீர்த்தருளினர். வாதநோய் எத்தகைய வன்மையுடையாரையும் இந்நோய் வந்துறின் ; கை கால்களை முடக்கி நடக்கவொட்டாதும் எவ்வேலையும் ஆற்றவொட்டாதும் மூலையிற் கிடத்துவிக்குமாகலின், இவ்வடை புணர்த்துரைத்தார். சூலை - வயிற்றுவலி நோய். இஃதே தருமசேனர் என்னும் பெயரினராய்ச் சமணசமயக் குருவாக இருந்த திருநாவுக்கரசரைப் பற்றி ஈர்த்துத் துன்புறுத்தியது. பின்னர், அரசரின் தமக்கையார் திலகவதியம்மையாரால் திருவாளன் திருநீறு வழங்கி அந்நோய் அகற்றப்பட்ட தென்ப, ஆதி, என்றமையால் நீரிழிவு, காமாலை, கண்டமாலை, தலைவலி முதலிய பல்வகை நோய்களும் தீர்க்குஞ் சிறப்பு மிக்க தென்பதாம். அடுதல் - தீர்த்தல் ; கெடுத்தல் என்னும் பொருட்டு, அகரம் : பண்டறிசுட்டு. (26) | | கதிரொளி யிருளெனக் கலங்குங் கண்களும் | | | முதிரிரு ளொளியென முகிழ்க்கும் பேரொளி | | | பொதிநலந் தருவது புக்குத் தோய்ந்தவர்க் | | | கதிரொலித் திரைசெயக் குமார தீர்த்தமே. |
(இ - ள்.) மிகுந்த ஒலியையுடைய அலைகளைத் தருகின்ற அக்குமார தீர்த்தமானது தன்னிடம் சார்ந்து முழுகுவார்க்கு ஞாயிற்றினது ஒளியையும் இருளெனக் கொண்டு கலக்கமடைகின்ற கண்களும் மிக்க இருளின்கண் தோன்றும் விளக்கொளி யென்னும்படி குருட்டுத்தன்மை நீங்கி ஒளிபெற்றுத் தோன்றும் ; அக்கண்களிடத்துப் பெரிய ஒளி நிறைகின்ற சிறப்பையும் தருவதாகும். (வி - ம்.) கதிர் - ஞாயிறு. குருட்டுக் கண்ணர்க்குப் பகலும் இருளும் ஒன்றே. எப்போதும் அவர்கண்கள் ஒளியிழந்தமையால் பகலும் இருளாகத் தோன்றும் எனவே, "கதிரொளி............ கண்களும்" என்றார். பிற எவ்வகை நோயினுங்காட்டில் கண்ணின் ஒளியின்மை. ஐம்பொறி உணர்வில் ஒன்று குறையாதலோடு உறுப்பறைத் தன்மையும் ஒருவற்கு இல்லாத தாக்கி நல்வழிக்கண் உய்க்கும் சிறப்பினால் கண்ணொளி கதுவ வைக்கும் தன்மையுடைய அதன் பெருமையை "பேரொளி பொதிநலம்" தருவது என்றார். முதிர் - முதிர்ச்சிபெற்ற; முக்கால வினைத்தொகை. முகிழ்த்தல் - மேலெழுந்து தோன்றுதல். பொதி - நிறைந்த. தோய்தல் - மூழ்குதல்; குளித்தல். தோய்ந்தவர் : இறந்தகால வினையாலணையும் பெயர். அதிரொலி - மிக்க ஒலி; ஒருபொருட் பன்மொழி. (27) | | புண்ணிடைப் புழுக்குலம் பொழிவ தாயினும் | | | விண்ணெனும் புண்கறை வீழ்ப்ப தாயினும் | | | துண்ணென வுறுப்பிறத் துணிப்ப தாயினும் | | | மண்ணுறி னப்பிணி வல்லை மாய்க்குமே. |
(இ - ள்.) புண்களிலிருந்து புழுக்கூட்டங்கள் உதிர்வதானாலும், விண்ணென்னும் ஓசையுடன் புண்களின் இரத்தங்கள் கீழே வீழ்வதானாலும், திடுமென்று கைகால் முதலிய உறுப்புக்கள் கெடும்படி ஒழிப்பதானாலும் |