பக்கம் எண் :

402தணிகைப் புராணம்

'கதமலை' என்று கூறினார். கவிகை - குடை. ஈண்டுச்சிறப்புப்பற்றி வெண்கொற்றக் குடைக்கீழிருந்து அரசுபுரியும் உரிமைக்கு வந்தது : ஆகுபெயர். சுதை - பால். நிகர் : உவமவுருபு. தோய - சேர; புணர; இன்பம்நுகர என்னும் பொருட்டு. பதவிகள், இந்திரவுலகு, வைகுந்தவுலகு போன்ற இன்பவுலகத்துப் பதவிகள்; அஃதாவது அவ்வவ் வுலகங்களின் தலைமையேற்று இன்பந் திளைத்தல். இதனைக் 1 "குடங்கைநீரும் பச்சிலையும் இடுவார்க் கிமையாக் குஞ்சரமும், படங்கொள் பாயும் பூவணையும் தருவாய் மதுரைப் பரமேட்டி" என்றார் பரஞ்சோதி முனிவரும். ஆகலான், "பதவிகள்" என்றார். படியின் - மூழ்கின்; குளிப்பின், மூழ்குதல் - நீரின் ஆடுதல்.

(32)

 சித்திநா லிரண்டையுஞ் செறிய வேண்டினும்
 முத்திற வுலகெலா முகிழ்க்க வேண்டினும்
 பொத்திமற் றவற்றினைப் புரக்க வேண்டினும்
 எத்திறம் வேண்டினும் ஈவ தன்னதே.

(இ - ள்.) எட்டுச் சித்திகளும் தம்பால் உண்டாக விரும்பினாலும், மூவகையான உலகம் யாவற்றையும் ஒடுக்க விரும்பினாலும், அவற்றில் நல்லனவற்றை நிறைத்து அவற்றைப் பாதுகாக்க விரும்பினாலும், வேறு எந்த வல்லமையைப் பெற விரும்பினாலும் அத்தீர்த்தம் தரவல்ல தாகும்.

(வி - ம்.) சித்தி நாலிரண்டு - அட்டசித்தி : இவை தமிழில் எண்வகை ஆற்றல் அல்லது எட்டுப் பேறு எனப்படும் ; இவற்றை எண்பொருட்பேறு எனவும் கூறுப. அவை : அணிமா, மகிமா, கரிமா, இலகிமா பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என, வடமொழிப்பெயரால் வழங்குவர். தமிழ்ப் பெயர்கள் முறையே : நுண்மை, பருமை, விண்தன்மை, மென்மை, விரும்பியதெய்தல், நிறைவுண்மை, தன் ஆட்சி செலுத்துதல், கவர்ச்சி என்பன. இவற்றுள் முன் கூறுவன மூன்றும் உடலாற்றலான பொருட் பேறுகளாம். அணிமா ஆவது, அணுவைப்போல் மிக நுண்மையாக இருத்தல், மகிமா என்பது, மலைப்போல் மிகப் பருமையாகவும் மண் முதல் விண்ணளவும், பாரமாகவும் இருத்தல், இலகிமா என்பது, மிக நொய்தாகப் பாரமில்லாதிருத்தல். இவ்வுடலால் எங்கும் விரைந்து செல்லுந் தன்மையும் சேற்றினும் நீரினும் காலடிகள் பதியாது செல்லுந்தன்மையும் வாய்க்கும். கரிமா ஆவது மலையினும் பருமையாய்ப் பெருவேகமுடைய சூறாவளியானும் அசைக்கப்படாதிருத்தல். பிராத்தியாவது, மனத்தால் நினைத்தவற்றைத் தம்முள் வரச் செய்தல். பிரகாமியமாவது, பேரழகு மிக்க இள மங்கையர் பலரைத் தம் எண்ணத்தின் வலியினாற் படைத்து அவர் யாவரொடும் ஒரே காலத்தில் அவர்கட்கேற்ற உருவும் திருவும் குணனும் அன்புங் கொண்டு அவருடன் புணர்தல். ஈசத்துவம் ஆவது - இந்திரன் பிரமன் முதலிய தேவர்களிடத்தும் தம்முடைய ஆணையைச் செலுத்துதல். வசித்துவம் ஆவது - மக்கள் யாவரையும் இயற்கைப் பொருள்களையும் கவர்ச்சி செய்தல். இவற்றின் செயல்களைப் பன்னூல்களும் பற்பலவாறாகக் கூறும். அவைகளில் அவ்வவற்றின் தன்மை ஆங்காங்கே கண்டு கொள்க; விரிப்பின் மிக நீண்டு செல்லுமாகலான், இப்பேறுகள் யாவும் கைவரப் பெற்றாலும் வீடும் வேண்டா

 1.  திருவிளை, இரசவாதப்.