| விறலினராய் ஓடும் செம் பொன்னும் ஒப்ப நோக்கும் உள்ளப் பாங்கினராய் உள்ளமுற்றத் துறந்த முனிவர் விரும்பார். | | 1 "இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும் | | | வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச் | | | சின்னச் சீரை துன்னற் கோவணம் | | | அறுதற் கீளொடு பெறுவது புனைந்து | | | சிதவ லோடொன் றுதவுழி யெடுத்தாங் | | | கிடுவோர் உளரெனின் நிலையினின் றயின்று | | | படுதரைப் பாயலிற் பள்ளிமேவி ஓவாத் | | | தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப் | | | பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்குநின் | | | செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வு " |
எனப் பேசி மகிழ்வர். ஈண்டு, உலகில் வாழும் பொதுமக்கள், இக்குமார தீர்த்தத்தின் மூழ்கின், இச்சித்திகளோடு யாவும் எய்தப்பெறுவர் எனத் தீர்த்தத்தின் சிறப்பை, அதனாற் கிட்டற்கரும் பேற்றை விளக்கினார் என்க. முத்திற உலகு, மண் விண் கீழ் என்பன. இவற்றை வடமொழியில் சொர்க்கம் மத்தியம் பாதாளம் என்பர். முகிழ்க்க - ஒடுக்க. பொத்தி - நிறைத்து. புரக்க - பாதுகாக்க. ஈவது - தருவது. (33) | | கமழ்புனன் முடித்தலை கலந்து தாழ்தொறும் | | | இமிழ்தரு பாவங்க ளிறங்கிக் கீழிடும் | | | நிமிர்தொறு நல்வினை நிமிர்ந்து மேலிடும் | | | அமிழ்தென வளிக்குமத் தடத்தி னென்பவே. |
(இ - ள்.) அமிழ்தென்னுமாறு எவ்வுயிர்களையும் பாதுகாக்கும் அக் குமார தீர்த்தத்தின் மணங்கமழ்கின்ற நீரானது மூழ்குவோரின் தலைமுடியின்மேல் கலந்து கீழே வடியும் போதெல்லாம் கட்டுற்றிருந்த பாவங்கள் யாவும் அவரை விட்டிறங்கிக் கீழ்ப் போகுமாறு செய்யும்; தலையின்மேல் படிந்து நிற்குந் தோறும் நல்வினையானது நிமிர்ந்து மேலோங்கி நிற்குமென்று அத்தீர்த்தத்தின் தன்மை யுணர்ந்தோர் கூறுவர். (வி - ம்.) குமார தீர்த்தமானது, உண்போர்க்கும் மூழ்குவோர்க்கும் அமிழ்துபோல் உறுதோறுயிர்தளிர்ப்ப நன்மைதந்து பாவங்களை யெல்லாம் தீர்த்தலின் "அமிழ் தென அளிக்கும் அத்தடம்" என்றார். இமிழ்தரு - கட்டுற்று நின்ற. பாவமானது, ஒருவனைத் தன்கீழ்க் கட்டுப் படுத்தித் துன்பந் தருதலால் "இமிழ்தரு பாவங்கள்" என்றார். இத் தீர்த்தத்தின் மூழ்கி நிமிர்ந்து நிற்கும்போது தலையிலிருந்து கீழிறங்கி அதன் நீர் போகும்போதெல்லாம், உச்சியில் தேய்த்துள்ள எண்ணெய் தான் நீரோடு கலந்து கீழே செல்லுங்கால், உடற்கண்ணுள்ள சூட்டைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு போதல் போலப் | 1. | திருவிடைமரு, மும்மணி : 7. |
|