| பாவங்களை யெல்லாம் கீழிறக்கிக் கொண்டே செல்லுமெனவும், அது, தலையிலிருக்குங்கால் றலையிற் சூட்டிய நறுமலர் மணம் தலையெங்கும் பக்கத்தினும் கமழுதல்போல நன்மையைத் தந்து கொண்டிருக்கு மெனவும் தீர்த்தத்தின் சிறந்த தன்மையை விளக்கமுறக் கூறினார். (34) | | உண்ணினு மழுக்கொடா சூச மோப்பமெய் | | | மண்ணினுஞ் செல்வுழி வழுக்கி வீழினும் | | | கண்ணுறக் காணினுங் கரையக் கேட்பினும் | | | தண்ணிய தடம்பலன் றருவ தென்பவே. |
(இ - ள்.) உண்டாலும் உடலின் அழுக்குகளோடு தீண்டலானவற்றைப் போக்குதற்கு உடம்பைக் கழுவினாலும், போகும்போது வழுக்கி விழுந்தாலும், கண்ணாற் பார்த்தாலும் சொல்லக் கேட்டாலும் குளிர்ச்சி பொருந்திய குமார தீர்த்தமானது பயன் கொடுப்பதாகும் என்பார், அறிந்தோர். (வி - ம்.) அக்குமார தீர்த்தம், அதில் அழுக்கைக் கழுவுவோர்க்கும், தீட்டைக் கழிப்போர்க்குங் கூட நற்பயன் தரும் என்பதால் தீர்த்தத்தின் பெருமை கூறியவாறு. ஆசூசம் - தீண்டல்; அன்றிக் காலலம்புதல் முதலிய தீச் செயல்களுமாம். ஓப்ப - போக்க. ஓப்புதல் - போக்குதல், கழித்தல் என்னும் பொருட்டு. ஒரு பொருள் அதில் தோய்ந்தோர்க்கே நன்மை தருவதாகும். இஃது, அதில் வழுக்கி வீழ்ந்தோர்க்கும், கண்ணாற் பார்த்தவர்க்கும், காதால் அதன் பெருமையைச் சொல்லக் கேட்டோர்க்கும் நற்பயன் தரும் என்றமையால், அதனிற் சிறந்ததொரு தீர்த்தமும் வேறெங்கும் இல்லையென்றபடியாம். எனவே, இறைவன் பண்புடைய தென்பது பெற்றாம். | | 1 "காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் | | | சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி " |
என்றமையால் இறைவனைக் காணினும் கேட்பினும் இன்பந் தருதல் போல, இத்தீர்த்தமும் அவ்வாறு காணினும் கேட்பினும் பயன்தருவதாம் என்க. அதன் பெருமையை உணரவல்லார்க்கே தெரியுமன்றிப் பிறர்க்குப் புலனாகாமை தோன்ற, "பலன் தருவ தென்பவே" என்றார். (35) | | விண்ணிட முயிர்த்தொகை மிடைய மெல்குமே | | | மண்ணிடம் விண்ணினும் வாழ்வு முற்றுமே | | | தண்ணறு நரகெலாந் தவ்வென் றேங்குமே | | | அண்ணலத் தடத்திடை யருளு மாண்பினே. |
(இ - ள்.) பெருமை பொருந்திய அக்குமார தீர்த்தத்தினிடத்தே அருள் செய்கின்ற சிறப்பினாலே, வானுலகத்தின் இடப் பரப்பெல்லாம் உயிர்க் கூட்டங்கள் மிக நெருங்குதலாலே தன் இடம் குறைவுபட்டு நிற்கும்; இம் மண்ணுலகத்தினிடம் இன்பம் மிகுதலால் வானுலகத்தினும் சிறந்த வாழ்க்கை | 1. | திருவிடை மருதூர். மும்மணி : |
|