| மிகுந்திருக்கும்; வெப்ப மிக்க நரகங்கள் யாவும் தம் கொடுமை சுருங்கி வருந்தும். (வி - ம்.) இத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க் கெல்லாம் நினைந்தவை நினைந்தவாறே முற்றுப் பெறுதலான், வீடுபேறும் வானுலகத்தின்பமும் பெற விழைந்தார்க்கு அவை கிட்டும் என்பது. அவரும், தம்மை யறியாது அத்தடாகத்தின் நீர்மேலுறப் பெற்ற உயிரிகளும் நிலையிலாப் பொருளாயின. புற் பூண்டு மரம் செடி கொடி முதலியன மீது, அத் தடாகத்தளாவிய காற்று மேல் விசி றலானே அவை யாவும் வானுலகிற் சென்றிருத்தலான், வானிடமெங்கும் இவ்வுயிர்த் தொகை நெருங்கி இடமெல்லாம் வெற்றிடமின்றி இருத்தலான், உயிர்த் தொகை மிடைய மெல்குமே' என்றும், இம்மண் ணுலகோர் அத் தீர்த்தத்துக் குளித்து, அக்குளித்தற் பயனால் எண்ணிய எண்ணியயாங்கு எய்தப் பெற்றுக்களிக்கின்றா ரன்றிக் கவல்கின்றார் ஒருவரும் இல்லையெனும்படி ஆக்குதலான், அவ்வின்பச் சிறப்பு நோக்கி "விண்ணினும் வாழ்வு முற்றுமே" என்றும், வெப்பம் பொருந்திய இரௌரவம் முதலிய நரகங்கள் யாவும் அத் தடாகத்தின்கண் மூழ்குதலால் பெரும்பான்மையான மக்கள் தம் பாவங்கள் யாவும் நீங்கப் பெற்று யாவருமே இந்திரன் முதலிய இறையவர் பதங்கள் பெற்றும், இறவாப் பிறவா ஏற்றமிக்க வீடு பேறுற்றும் செல்லலானே, நரகஞ் சேர்வார் எவருமின்மையின், "தவ்வென் றேங்குமே" என்றும் கூறினார். மிடைய - நெருங்க. மெல்குதல் - சுருங்குதல். மெல்கும் - சுருங்கும். விண்ணினும் என்பதில், உம்மை சிறப்பு. தண் - குளிர்ச்சி. நரகம் நெருப்பு மயமாய் வாட்டுதலின்றிக் குளிர்மை இன்மையால் "தண்ணறு" என அடை கொடுத்தார். நரகம் - நரகு என்றாயது, கடைக்குறை விகாரம். நரகம், இருபத்தெட்டு வகை யென்ப. அவற்றின் விரிவை, விரிந்த நூல்களுட் காண்க. அவை, பொய்க்கரி கூறுவோர், பிறர்மனை நயப்போர், கொலை களவுகளிற் கன்றினோரைத் தன்னகப்படுத்து மென்ப. இதன் கொடுமைகளை, | | 1 "தெறுசொ லாளர் உறுசினந் திருகி | | | எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ | | | ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் | | | வார்ந்தும் குறைத்தும் மதநாய்க் கீந்தும் | | | செக்குரற் பெய்தும் தீநீர் வாக்கியும் | | | புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப் | | | பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா | | | வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் | | | நிரயம் " |
எனப் பட்டினத்தடிகள் கூறலால் அறியப்பெறும். இவ்வாறாய கொடிய நரகமும் தன் இடஞ் சுருங்கி நிற்பதால் "தவ்வென்றேங்குமே" என்றார். தவ்வென்பது இடஞ் சுருங்குதற்கு விரைவுக் குறிப்பு மொழியாய் வந்தது. | 1. | கோயில் நான்மணிமாலை : 36. |
|