| | 1 "நூல்கால் யாத்த மாலை வெண்குடை | | | தவ்வென் றசைஇததாதுளி மறைப்ப " |
என்றும், | | 2 "கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் | | | தவ்வென்னும் தன்மை இழந்து " |
என்றும் வருவனவற்றில் தவ்வென்ப திக்குறிப்புணர்த்தல் கண்டு கொள்க. இப்பாட்டினால் சொர்க்கம் மத்தியம் பாதாளம் என்னும் மூவுலகத்தின் தன்மைகளும், இத் தீர்த்தத்தில் மூழ்குவார்க்கு இம் மூன்றுலகத்துள் விண்ணுலகிற் கிட்டும் இன்பமும், மண்ணுலகின் இன்பப் பெருவாழ்வு வாழும் சிறப்பும் நரக வுலகில் வரும் துன்பங்கள் தீரப் பெற்று வாழும் வகையும் நிரலே உரைத்தவா றறிக. (36) | | அத்தலந் தன்னையா மடைகு வாமெனப் | | | புத்தியி னினைப்பினும் புறத்திற் செல்லினும் | | | பத்தடி நடப்பினும் பரிந்த நோயெலாம் | | | கொத்தொடு மவர்புறம் வழிக்கொண் டோடுமே. |
(இ - ள்.) நாம் அந்தத் தலத்திற்குச் செல்வோமென்று மனத்தில் நினைத்தாலும், தாம் இருந்த இடம் விட்டுப் புறத்தில் போனாலும், அதற்காகத் தம் கால்களில் பத்தடி தூர வளவு நடந்து சென்றாலும், வருத்தந் தந்த நோய்கள் யாவும் தம் கூட்டத்தோடும் அவரிடம் விட்டு வெளிப் போந்து வழிக்கொண்டு ஓடிப்போகும். (வி - ம்.) ஒருவர் அத் தலத்துக்குப் போக நினைப்பினும், அதற்காகப் புறப்படினும், பத்தடி தூரம், போனாலுங் கூடத் துன்பந் தந்த நோயெல்லாம் ஓடு மென்றமையால் அத் தலம் எந் நாட்டினும் சிறந்த ஒன்றென்பதாம். புறத்திற் செல்லல் - இருந்த இடத்தை விட்டு வெளிச் செல்லல். பத்தடி - காலின் அளவால் பத்து அடி அளவு. பரித்தல் - வருத்தல்; பரிந்த - வருந்திய : தன்வினை, பிறவினைப் பொருட்டு. கொத்து - திரள்; கூட்டம். வழிக்கொள்ளல் - புறப்படுதல். (37) | | பரிதிமேற் கெழுந்தொறும் பனிமு ருங்குமா | | | றொருதிருத் தணிகையை யுன்னிச் சார்தொறும் | | | அருகிநோ யத்தட மாடத் தீர்வுறும் | | | முருகனைத் தொழுதெழ முகிழ்க்கு மின்பமே. |
(இ - ள்.) ஞாயிறானது கீழ்த்திசையில் தோன்றி மேல்நோக்கி யெழுந்து செல்லுங்காலெல்லாம் பனிப்படலமானது கெட்டுவிலகுதல் போல, ஒப்பற்ற திருத்தணிகையை நினைந்து செல்லுந்தோறும் தமக்குற்ற நோய்கள் குறைந்து அக்குமார தீர்த்தத்தில் மூழ்கியெழத் தீரும்; அங்கு முருகப் பெருமானை வணங்கியெழ இன்பம் உண்டாகும். | 1. | நெடுநல் : 184 - 5. | | 2. | திருக்குறள் : 1144. |
|