| (வி - ம்.) பரிதி - ஞாயிறு; கீழ்த்திசையில் தோன்றிய மேலே நோக்கியெழுந்து வானவீதிக்கட் செல்லுந்தோறும் திசையெங்கும் மூடி நடுக்கஞ் செய்துகொண்டிருந்த பனிக்கூட்டம் விலகியோடுதல்போல நோய் குறைந்து தீர்த்தத்தில் ஆட முழுதுந்தீரும். முருகவேளைத் தொழுதெழுதலால் பேரின்பம் உண்டாம். மேற்கு - மேலே என்னும் பொருளது; அல்லது, மேல்திசை நோக்கிப் போகுந்தோறும் என்றலுமாம். முருங்குதல் - கெடுதல்; ஒழிதல், ஒரு - ஒப்பற்ற. முகிழ்க்கும் - தோன்றும்; உண்டாகும். அருகிநோய், நோய் அருகி என மாற்றுக. (38) | | அஞ்சிறைப் பூவைபைங் கிள்ளை யாதியைத் | | | தஞ்சிறைப் படுப்பராற் றக்க வூணினால் | | | மஞ்சனு முத்தியை வழங்குஞ் சூழ்ச்சியால் | | | நெஞ்சுறு நினைவெலா நிரப்பி யாவர்க்கும். |
(இ - ள்.) அழகிய சிறகுகளையுடைய நாகணவாய்ப் புட்களைப் பச்சைநிறக் கிளிகள் முதலிய பறவைகளை அவைகள் உண்ணத்தக்க இரைகளினால் பறவை பிடிப்போர் தம் வலைகளால் பிடிப்பர்; அது போல, மக்கள் யாவரையும் தன் சூழ்ச்சியினால் தன்னை மனத்திலுற்ற நினைப்பினால் நிறைவுசெய்து நம் புதல்வனாகிய முருகனும் வீடுபேற்றைக் கொடுப்போனாவன். (வி - ம்.) பறவை பிடிப்போர், வலைவிரித்து அவ்வலை சூழ்ந்த நடுவிடத்தே பறவைகள் உண்பதற்கேற்ற இரைகளைத் தூவிவைப்பர்; அவை அவ்விரை தின்னவந்து இறங்கியவுடன் தாம் வலைகளினால் அவற்றைப் பிடித்துச் சிறைப்படுத்திக் கொண்டு செல்வர்; அதுபோல, முருகவேளும் தன் அருளென்னுஞ் சூழ்ச்சியால் மக்களின் நெஞ்சின்கண் இத்தலத்தை நினைக்குமாறு செய்து அந்நினைப்பையே நிரப்பி, அந்நினைவுற்ற அன்பர்கள் யாவர்க்கும் வீட்டுலகை அருளுவன்; இஃது, அத்தலத்தின் சிறப்பென, அத்தலத்தின் பெருமையை விளங்க உரைத்தார். பூவை - நாகணவாய்ப்புள். கிள்ளை - கிளி. ஆதியென்றமையால் புறா, கவுதாரி, பல்வகைக் குருவிகளும் கொள்க. சிறை - சிறைப்படுத்துவதாகிய வலை; அல்லது கண்ணிகள் : ஆகுபெயர். ஊண் - உணவு; இரை. அதுபோல என்று உவமம் எடுத்துக் கூறாமையால் இது, எடுத்துக்காட்டு உவமையணி. மஞ்சன் : மைந்தன் என்னுஞ் சொல்லின் போலி. சிவபெருமான் கூற்றாதலின், முருகன் தம் புதல்வனெனக் கொண்டு இவ்வாறு மஞ்சன் என்றார். ஆல் இரண்டும் இசை நிறைக்கவந்த அசைநிலைகள். "சூழ்ச்சியால் நெஞ்சுறுநினைவெலாம் நிரப்பி யாவர்க்கும் மஞ்சனும் முத்தியை வழங்கும்" எனக் கொண்டு கூட்டிப் பொருள் முடிபு கொள்க. (39) | | கணிகமழ் தடவரைக் கலைகள் குப்புறும் | | | கணிகவெற் பதனிடைக் கருத்து முற்றுறும் | | | கணிகமுற் றிருப்பினோர் கங்குல் வைகுறின் | | | கணிதமில் பெரும்பயன் கைக்க ணெல்லியே. |
(இ - ள்.) வேங்கைப் பூவின் மணங் கமழ்கின்ற விசாலம் பொருந்திய முகட்டினின்று ஆண் குரங்குகள் தாவுகின்ற திருத்தணி மலையினிடத்துத் |