(இ - ள்.) பொலிவுபெற்ற முல்லைநிலமானது கல்விச் செல்வம் மேன்மே லுயரும்பொருட்டு நினைந்து நாயகர் பிரிய அவர் பிரிவினை யுணர்ந்த தலைவிமார் நின்னிற் பிரியேன் பிரியினுயிர்வாழே னெனக்கூற அத்தலைவி யறக்கற்பாற்றி யுயிர் தாங்கியிருக்கும் பொருட்டு அத் தலைவர்கள் கார்முந்துமுன் றேர்முந்துமென்று சொல்லிய சொல்லின்படி அப்பெண்கள் அரிய உயிர் உடலோடு கூடிக் கற்பாற்றி வாழ்ந் திருக்கையைத் தனக்குரிய காத்தற் றொழிலாகுமென் றுட்கொண்டு பாதுகாக்கின்ற அக்காத்தற் கடவுளாகிய மாயோனுக்கு அன்பு தழைக்குஞ் செயலினால் பொலிவை யடைந்ததென்க. (வி - ம்.) ஆக்கம் - கல்வி செல்வங்களான் மேன்மேலுயர்தல்; இருக்கை இரண்டாவது விரிக்க; வாக்கு - கார்முந்து முன்றேர் முந்து மென்ற சொல்; அஃதாவது கார்காலத்து வருவேனென்று கூறுதல்; கண்ணன் - மாயோன்; திருக்கோவையா ருரையி லிதனைப் பேராசிரியர் பாகதச் சிதைவென்பர். இருத்தலும் இருத்தனிமித்தமும் முல்லையாதலின் உயிர்வாழ்ந் திருக்கை யென்றார்; பூத்தல் - தழைத்தல்; கானம் - முல்லைநிலம்; அகரம் பண்டறிசுட்டு; துணைவர் ஈறுகெட்டுத் துணையென நின்றது. (59) | | ஆளிக் கொடியேந் தியதங்கை யகற்சி யாற்றான் | | | மூளுற் றவார்வத் தணிமைக்கண்முற் றிற்று நேராம் | | | காளக் குருமே னிமுராரிகல் சூழ்மு ரம்பு | | | கோளுற் றகானக் கொருதெய்வத மாய கொள்கை. |
(இ - ள்.) கரிய நிறம்பொருந்திய திருமேனியையுடைய முரனென்னும் அசுரனுக்குப் பகைவனாகிய மாயோன் குறிஞ்சிநிலத்தைச் சூழ்ந்த பாலைநிலத்தைத் தன்னிடத்தே கொண்ட முல்லைநிலத்திற்கு ஒப்பற்ற அதி தெய்வமாகிய தன்மையானது (தனது வெற்றிக் கடையாளமாக) யாளியை வரைந்த கொடியினை உயர்த்திய தங்கையாகிய துர்க்கையை (விட்டு) நீங்குதலைப் பொறாதவனாகி மேன்மேலுமெழுகின்ற அன்பினாலே அணிமைக் கண்ணடைந்திருத்தலை யொப்பாகும். (வி - ம்.) குரு - நிறம்; 'குருவுங்கெழுவு நிறனுமாகு' மென்ற தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. காளம் - கருநிறம்; அகற்சி யிரண்டாவதன் றொகை. முற்றுதல் - அடைதல்; தெய்வதம் வடமொழிச் சிதைவு; சிந்தாமணியிற் காண்க. (60) | | தூங்குங் கனிமல் கியகொன்றை துணர்த்த லர்ந்து | | | பாங்கெங் கணுநிற் பதுருத்திர பல்க ணங்கள் | | | வீங்கும் புகழ்மால் விடைபற்றிவெள் ளிச்சி லம்பி | | | னோங்கும் பெருமான் முனமுய்ப்பவந் துற்ற தொப்பாம். |
(இ - ள்.) கனிகள் நிறைவுற்றுத் தொங்குகின்ற கொன்றை மரங்கள் கொத்துக்கொண்டு மலர்ந்து பக்கங்கள் எவ்விடத்து நிற்குந் தன்மையானது, உருத்திரராகிய பலகணத் தலைவர்கள் மிக்க புகழ் நிறைந்த திருமாலாகிய இடபத்தினைக் கைப்பற்றி வெள்ளிமலையின்க ணெழுந்தருளி யிருக்கின்ற யாவரினுமேம்பட்ட பெருமான் திருமுன்னரே கொண்டுபோய் விடுதற்காக வந்து சேர்ந்திருத்தலை நிகர்க்கும். |